தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 30, 2021, 12:38 PM IST
தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் title=

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும்.  இதன் காரணமாக சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

30.10.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,  ஓரிரு இடங்களில் அதி கன மழையும்,  தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு  மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

31.10.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் கடலூர், விழுப்புரம்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

01.11.2021: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 
02.11.2021 முதல் 03.11.2021 வரை: தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை அப்டேட்:

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
ஸ்ரீவைகுண்டம்  ( தூத்துக்குடி ) 18,  பரங்கிப்பேட்டை  (கடலூர்  ) , தூத்துக்குடி (தூத்துக்குடி) தலா 17, புதுச்சேரி  ( புதுச்சேரி ), தூத்துக்குடி Aws (தூத்துக்குடி) தலா 14, ஓட்டப்பிடாரம்    (தூத்துக்குடி) , திண்டிவனம்  ( விழுப்புரம் ) தலா 13, காரைக்கால்  ( காரைக்கால் ) 11, செஞ்சி   ( விழுப்புரம் ), எண்ணூர் ( திருவள்ளூர் ) தலா 10, கேளம்பாக்கம்  ( செங்கல்பட்டு) , வானுர்  ( விழுப்புரம் ) , காயல்பட்டினம்  (தூத்துக்குடி) , வாலிநோக்கம்  ( ராமநாதபுரம் ) தலா 9 
தாம்பரம்   ( செங்கல்பட்டு ), அம்பத்தூர்  ( திருவள்ளூர் ), கடம்பூர்  (தூத்துக்குடி) தலா 8, மணியாச்சி  (தூத்துக்குடி) , பாளையம்கோட்டை  ( திருநெல்வேலி ) , கயத்தாறு  (தூத்துக்குடி) , திருப்போரூர்  ( செங்கல்பட்டு ) , வைப்பர்  (தூத்துக்குடி) , செய்யார்  ( திருவண்ணாமலை ) , மரக்காணம்  ( விழுப்புரம் ) , மஞ்சளாறு  ( தஞ்சாவூர் ) , கடலூர்  (கடலூர்) தலா 7. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

30.10.2021 முதல் 01.11.2021 வரை: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி  காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

30.10.2021 முதல் 03.11.2021 வரை: தென்கிழக்கு அரபிக் கடலை ஒட்டிய தெற்கு கேரள  கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

Trending News