இவர் தான் சென்னை மேயரா? மாலை அறிவிப்பு வெளியாகிறது!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 21 மாநகராட்சிகளை கைப்பற்றி முழுமையான வெற்றி பெற்று உள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2022, 04:29 PM IST
  • உள்ளாட்சிகளில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் 102 பெண்கள், 98 ஆண் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர்.
இவர் தான் சென்னை மேயரா?  மாலை அறிவிப்பு வெளியாகிறது! title=

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் புதிய மேயராக பதவியேற்க போகும் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 21 மாநகராட்சிகளை கைப்பற்றி முழுமையான வெற்றி பெற்று உள்ளது. இதில் உள்ளாட்சிகளில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, சென்னை மாநகராட்சியில் 102 பெண்கள், 98 ஆண் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர். இதில் சென்னை மாநகராட்சி தாழ்ந்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் திருவிக நகர் 74 வார்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியா அவர்களுக்கும், கொளத்தூர் தொகுதி 70 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீதனி அவர்களுக்கும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | அடுத்த ஸ்கெட்ச் ரெடி! கைது ஆகிறாரா முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்?

இது குறித்து பிரியா அவர்களிடம் பேசும்பொழுது மேயர் வேட்பாளருக்கு போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் கேட்டு உள்ளேன், இது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.  அதே போல் 159 வார்டில் போட்டியிட்ட அமுதபிரியா செல்வராஜ் அவர்களும் களத்தில் உள்ளார், இவர் தென்சென்னை மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியனின் தீவிர ஆதரவாளர். அதே போல் 100 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தி பரமசிவம் பெயரும் அடிபடுகிறது. 

chennai

இதில் வசந்தி ஏற்கனவே மாமன்ற உறுப்பினராக அனுபவம் உள்ளவர், இவர் பெயரை திமுக டிக் செய்யுமா என்பது தெரியவில்லை. ஆனால் வடசென்னை பகுதியை சேர்ந்த ஒருவர் தான் திமுகவின் புதிய மேயராக அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து திமுக தலைவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார், இதற்கான அறிவிப்பு மாலை வெளியாகும் என திமுக தரப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | பெண்களுக்கு 1000 ரூபாய் திட்டம்: இந்த மாதமே அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News