சிறுநீரகம் பாதிக்கபட்ட கணவனுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மனைவி!

பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்ட பல்வேறு நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என சீறுநீரக மருத்துவர் ஜெரார்டு வினோத் பேட்டி   

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Mar 26, 2024, 01:48 PM IST
  • கணவனுக்காக சிறுநீரகத்தை தானம் செய்த மனைவி
  • மருத்துவர்கள் நெகிழ்ச்சி
  • அவருக்கு 38 வயதாகிறது
சிறுநீரகம் பாதிக்கபட்ட கணவனுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மனைவி! title=

சிறுநீரகம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வுகளை இந்த மாதம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையினர் முன்னேடுத்து வருகின்றனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது - 

அப்போது, கோவை கற்பகம் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர்களான மருத்துவ கண்காணிப்பாளர் ரங்கநாதன் - சிறுநீரக மருத்துவர் ஜெரார்டு வினோத் - மருத்துவர் கார்த்திக் - மருத்துவர் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது.

சிறுநீரகம் பாதிக்கபட்ட 38 வயதானவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நமது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

அவருக்கு இரண்டு கிட்னிகளும் செயல் இழந்து டயாலிசிஸ் நிலையில் இருந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் கூறிய பொழுது அவரது மனைவி அவருக்கு ஒரு சிறுநீரகம் தானம் அளிக்க முன் வந்தார். 

மேலும் படிக்க | நீலகிரி தொகுதி மக்களை தற்போதைய எம்.பி ராசா அவமானப்படுத்தியுள்ளார்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

இதனை தொடர்ந்து மருத்துவமனை மருத்துவக்குழு அவர்கள் இருவருக்கும் பல்வேறு பரிசோதனைகள் செய்து பின்னர் நோயாளிக்கு நமது மருத்துவமனையில் கடந்த 10 ம்தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு புதிய சிறுநீரகம் 100 சதவீகிதம் கச்சிதமாக பொருந்தி அவரது உடலில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. 

அந்த நோயாளி தற்போது நல்ல நிலையில் உள்ளார். இது நமது மருத்துவமனையின் நற்பெயருக்கு மேலும் பெருமை அளித்துள்ளது என்றார்.  தொடர்த்து தற்போது உடல் உறுப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு நோயாளிகளுக்கு தேவையான சிறுநீரகங்கள் கிடைப்பதில்லை. அதனால் நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் நிலைக்கு தள்ள படுகின்றனர் எனவே பொதுமக்கள் உடல் உறுப்புகள் தானம் வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இப்போதே ராஜினாமா செய்யுங்கள் - திமுக அமைச்சரை கிண்டல் செய்த ஆர்பி உதயக்குமார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News