எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணமா? ராகவா லாரன்ஸ் சொன்ன பதில்!

சென்னை கொருக்குப்பேட்டையில் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு நடிகர் லாரன்ஸ் உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்த செயலுக்கு லாரன்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 26, 2024, 12:56 PM IST
  • மாற்றம் என்பது ஒரு செல்ப் சர்வீஸ்.
  • இது அரசியலுக்கான நோக்கம் அல்ல.
  • போகப் போக மக்கள் புரிந்து கொள்வார்.
எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணமா? ராகவா லாரன்ஸ் சொன்ன பதில்! title=

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி பன்னிரண்டாம் வகுப்பில் 592 மதிப்பெண் பெற்று அந்த மாணவி வைஷ்ணவா கல்லூரியில் சீட்டு கிடைக்காத நிலையில் விஜய் டிவி பிரபலம் நடிகை மான அறந்தாங்கி நிஷாவின் வேண்டுகோளை ஏற்று லாரன்ஸ் படிக்கப் பணம் இல்லாத கல்லூரியில் சீட்டு கிடைக்காத நிலையில் அவரை முன்வந்து அந்த மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வைஷ்ணவா கல்லூரியில் படிப்பிற்கான அட்மிஷன் பெற்றுக் கொடுத்து பின்னால் அந்த மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் லாரன்ஸ், உதவி என்பது என்னை பார்த்து பல்வேறு பட்ட மக்கள் உதவி செய்வார்கள் என்பதற்காக தான் நான் வீடு தேடி சென்று உதவிகளை செய்து வருகிறேன் அதில் எனக்கு ஒரு சந்தோஷம் உள்ளது.

மேலும் படிக்க | சென்னை : இரவு பார்ட்டிக்கு அழைத்த பெண் அழகி... ஆசையாக சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அதிலும் வடசென்னை நான் பிறந்த இடம் வருகையின் போது மக்கள் ஆரவாரத்தில் வரவேர்த்தனர் அது மட்டும் அல்லாமல் என்னிடம் மனுக்களையும்  கொடுத்துள்ளனர். இதே போன்று கிராமங்களில் சென்றால் என்னிடம் ஏகப்பட்ட மனுக்கள் இருக்கின்றது அதை படிக்க படிக்க அவ்வளவு கஷ்டங்கள் உள்ளது என்னால் முடிந்த அளவில் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நான் உதவி செய்வேன், யாரிடமும் பணம் வாங்காமல் எனது சொந்த செலவில் செய்து வருகிறேன். அப்போது செய்தியாளர் ஒருவர் நிங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் அரசியலுக்கு வர நோக்கம் எனக்கு இல்லை. ஆனால் மாற்றம் என்பது ஒரு செல்ப் சர்வீஸ் தன்னலமற்ற சேவை ஏதாவது எதிர்பார்த்து செய்தால் இது மாற்றத்துக்கான தேவை  என்பதையும் அதிலும் இந்த சேவையானது கடவுளுக்கான சேவை.  

இது  அரசியலுக்கான நோக்கம் அல்ல அது போன்ற நினைப்பவர்கள் போகப் போக புரிந்து கொள்வார், விதவைகள்  தையல் மெஷின் கேட்கிறார்கள் மாணவர்களின் படிப்பு அதைவிட முக்கியம் என்பது இதனால் எனது வீட்டில்  60 மாணவர்களை படித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் இந்த மாணவியும் ஒருவர் ஜூன் மாதங்களில் மாணவர்களுக்கு பீஸ் கட்டுவதற்கு மிக சிரமப்பட்டு வரும் பெற்றோர்கள் அதற்கான பாதி கட்டணத்தையும் நான் கொடுத்து வருகிறேன். அந்த அடிப்படையில் இந்த மாணவி என்ன படிக்கிறாரோ அதற்கான தேவைகளை நான் பூர்த்தி செய்வேன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | கமலாலயத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்: எல். முருகன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News