நெட்பிளிக்ஸை ஓவர்டேக் செய்த அமேசான் பிரைம் வீடியோ!

ஜெர்மனியில் நெட்பிளிக்ஸ் தளத்தை, அமேசான் ப்ரைம் வீடியோ தளம் ஓவர்டேக் செய்து முன்னணி வகித்து வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2022, 03:47 PM IST
  • ஜெர்மனியில் நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்துபவர்களை விட அமேசான் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • கடந்த ஆண்டு ஜெர்மனியில் அமேசான் பயன்படுத்துவோர் 1.4-லிருந்து 12.6 மில்லியன் என்ற அளவில் அதிகரித்து இருக்கின்றனர்.
நெட்பிளிக்ஸை ஓவர்டேக் செய்த அமேசான் பிரைம் வீடியோ! title=

கொரோனா தொற்று பரவலின் காரணமாக தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கமுடியாததால் ஏராளமானோர் படங்களை OTT-யிலேயே பார்க்க தொடங்கிவிட்டனர்.  இதனால் ஒவ்வொரு தளங்களும் போட்டிபோட்டு கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய படங்களை வெளியிடுகிறது.   முன்பைவிட இந்த தொற்று காலத்தில் தான் இதன் பயன்பாடு சற்று அதிகரித்து இருக்கிறது என்றும் சொல்லலாம்.  அந்த வகையில் ஜெர்மனியில் நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தை பயன்படுத்துபவர்களை விட அமேசான் பிரைம் வீடியோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ALSO READ | பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் படங்கள்!

கடந்த ஆண்டு ஜெர்மனியில் அமேசான் ப்ரைம் வீடியோவை பயன்படுத்துவோர் 1.4-லிருந்து 12.6 மில்லியன் என்ற அளவில் அதிகரித்து இருக்கின்றனர்.  நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் 300,000-லிருந்து 9.6 மில்லியன் வரை மட்டுமே அதிகரித்துள்ளதாக சர்வே கூறுகிறது.  இந்த 2022-ல், இவை இன்னும் அதிகரிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த ஆண்டு இறுதிக்குள் அமேசான் ஜெர்மனியில் 13.8 மில்லியன் ஆக்டிவ் சந்தாதாரர்களை வைத்திருக்கும் என்று நம்பபடுகிறது.  அதே சமயம் நெட்பிளிக்ஸ் 10 மில்லியன் சந்தாதாரர்களை மட்டுமே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.  

அமேசான் பிரைம் வீடியோ அதன் சந்தாதாரர்களுக்கு நல்லமுறையில் சலுகைகளை வழங்குகிறது.  இது சந்தாதாரர்களுக்கு இலவசமாக இசை (Music) சேவையையும், இன்னும் பிற சேவைகளையும் வழங்குகிறது.  இதன் சிறப்பம்சம் குறித்து Ampere analyst ஜானிகா ஜண்ட்சன் கூறுகையில், அமேசான் ப்ரைம் வீடியோவானது, நெட்பிளிக்ஸ் தளத்தை காட்டிலும்  ஜெர்மன் மொழி டைட்டில்களை அதிகமாக காட்டுகிறது என்று கூறியுள்ளார்.  இதுமட்டுமல்லாது அமேசான் ப்ரைம் வீடியோ கூடுதலாக, கால்பந்து சாம்பியன்ஸ் லீக்கின் சில போட்டிகள் மற்றும் சில விளையாட்டு போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புவதால் அதிகமான மக்கள் இதனை நோக்கி ஈக்கப்படுகிறார்கள்.  ஆனால் நெட்பிளிக்ஸ் இது போல் வித்தியாசமாக செய்யாமல் படங்கள் மற்றும் தொடர்களை வெளியிடுவதிலேயே கவனத்தை செலுத்தி வருகிறது, இதுகூட இதன் வளர்ச்சி தடைபடுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ALSO READ | Screenshot எடுத்தால் எச்சரிக்கும் வசதியை அறிமுகம் செய்யும் பேஸ்புக்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News