iPhone வாங்குபவர்களுக்கு Bad News; முழு விவரம் இங்கே

சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது, இது நிறுவனங்களின் உற்பத்தியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2021, 08:50 AM IST
iPhone வாங்குபவர்களுக்கு Bad News; முழு விவரம் இங்கே title=

புது டெல்லி: உலகம் முழுவதும் பல ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் இருந்தாலும், உலகின் முக்கிய நிறுவனங்களின் பெயரை நாம் எடுத்துக் கொண்டால், அநேகமாக ஆப்பிளின் பெயர் தான் முதலில் வரும். சமீபத்தில் ஆப்பிள் iPhone 13 இன் நான்கு மாடல்களையும் வெளியிட்டது.

இதற்கிடையில் தற்போது ஒரு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம். ஆப்பிள் (Apple) நிறுவனம் சீனாவில் இருந்து அதன் உற்பத்தி இடத்தை மாற்றலாம், இந்த செய்தி மக்களிடையே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ | சீனாவைப் போல இந்தியாவிலும் மின்சார நெருக்கடி வருமா? நிலக்கரி இருப்பு குறைவு

NikkeiAsia இன் அறிக்கையின்படி, சீனாவில் (China) மின்வெட்டு பிரச்சனை சில காலமாக அதிகரித்துள்ளது, இதன் காரணமாக ஆப்பிள் உட்பட அனைத்து நிறுவனங்களும் உற்பத்தியில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன, அதன் நேரடி விளைவு நிறுவனத்தின் விநியோகத்தில் தெரிகிறது. இந்த பிரச்சனையால், ஆப்பிள் உற்பத்தியை சீனாவிலிருந்து வேறு நாட்டிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சீனாவில் இந்த மின் பிரச்சனை நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதி வரை அல்லது இன்னும் நீண்ட காலம் நீடிக்கும் என்றும் Nikkei ஆதாரம் கூறுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்கள் உற்பத்தி செய்வது மிகவும் சிக்கலாகிவிட்டது. ஆப்பிள் நிறுவனத்துடன், அமேசானும் இந்த நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக அங்கு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மொத்தம் 17 மாகாணங்களில், கடந்த சில மாதங்களாகவே மிக மோசமாக மின்வெட்டு நிலவுகிறது. இந்த குறிப்பிட்ட மாகாணங்களில் இருந்துதான் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு 66% பங்களிப்பு கிடைக்கிறது. இதனால்  இந்த மாகாணங்களில் உள்ள சிறு, குறு, கனரக தொழிற்சாலைகள் என அனைத்துமே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | உங்கள் வீட்டு கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா; இதோ உங்களுக்கான டிப்ஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News