710 ரயில் நிலையங்களில் இனி இலவச Wi-Fi வசதி...!

இந்தியாவில் உள்ள சுமார் 710 ரயில் நிலையங்களில் இனி இலவச Wi-Fi வசதியை பெறலாம் என ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2018, 11:16 AM IST
710 ரயில் நிலையங்களில் இனி இலவச Wi-Fi வசதி...!  title=

இந்தியாவில் உள்ள சுமார் 710 ரயில் நிலையங்களில் இனி இலவச Wi-Fi வசதியை பெறலாம் என ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

நாடுமுழுவதும் உள்ள சுமார் 710 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்படும் என முன்னதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் நடைபெற்ற ஸ்மார்ட் ரயில்வே கருத்தரங்கில் கலந்து  கொண்டு பேசுகையில், ‘தகவல் தொழில்நுட்பத்தின் நவீன அம்சங்களை பயணிகளுக்கு கிடைக்கச் செய்வதில் ரயில்வே ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ரயில்களின் நேரத்தை கடைபிடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

கடந்த ஏப்ரல் முதல் இப்போது வரை ரயில்களின் குறித்த நேர இயக்கம் 74 சதவிகிதம் வரை மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ரயில் இன்ஜின்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, ரயில் சென்று கொண்டிருக்கும் இடத்தை துல்லியமாக அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அடுத்த 6 மாதங்கள் முதல் 8 மாதங்களில் கூடுதலாக 6,000 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி கொண்டுவரப்படும் என்று கூறினார். 

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் கருத்தரங்கில் பேசுகையில், ரயில் நிலையங்களில் வழங்கப்படும் காகித டிக்கெட்-களை காகிதம் இல்லாமல் புதியவகையிலான பயண சீட்டுக்களை அறிமுகபடுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள சுமார் 710 ரயில் நிலையங்களில் இனி இலவச Wi-Fi வசதியை பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

முதலில் மிகவும் பரபரப்பான 100 ரயில் நிலையங்களில் இந்த இலவச வை-ஃபை சேவை கொடுக்கப்பட்டது. பின்னர், நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் 300 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் பரவலாக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து கூகுள் நிறுவனம் தரப்பில், `இந்தியாவில் இருக்கும் ஒரு பெரும் மக்கள் கூட்டத்துக்கு அதிவேக இணையசேவையை எடுத்துச் செல்வது என்பது ஒரு மகத்தான பயணமாக இருந்தது.

இதில் அவ்வளவு சவால்கள் நிறைந்திருந்தன. இதன் மூலம் அனைத்து இந்தியர்களையும் இணைய பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என்றுள்ளது.

ரெயில்-ஒயர் (Railwire) என்ற பெயரில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் கிடைக்கப் பெறும் இந்த வை-ஃபை, ஒரு பயனருக்கு சுமார் 30 நிமிடங்கள் இணைய சேவையை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும். இந்த அதிவேக இணைய சேவை மூலம் 350 எம்.பி டேட்டா-வை நுகர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News