Vivo வாங்க சரியான நேரம்..! கலர்மாறும் மொபைலுக்கு ரூ.2,500 ஆஃபர்..! மிஸ் பண்ணீடாதீங்க..

விவோவின் லேட்டஸ்ட் வெளியீடான Vivo V23 மொபைலுக்கு 2,500 ரூபாய் வரை ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளன

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 01:59 PM IST
Vivo வாங்க சரியான நேரம்..! கலர்மாறும் மொபைலுக்கு ரூ.2,500 ஆஃபர்..! மிஸ் பண்ணீடாதீங்க.. title=

Vivo V23 தொடரின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் Vivo V23 இன்று (புதன்கிழமை) முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ்ஸில் விற்பனையில் களமிறக்கப்பட்டுள்ள இந்த மொபைலுக்கு அதிரடியாக 2,500 ரூபாய் வரை ஆஃபர்கள் அள்ளி வீசப்பட்டுள்ளன. Vivo V23 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.29,990 தொடக்க விலையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Vivo V23 8GB+128GB மற்றும் 12GB+256GB சேமிப்பு என இரண்டு வகைகளில் இப்போது சந்தைகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை அதிகபட்சமாக 34,990 ரூபாய் விரை விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ | Realme 9i விமர்சனம்: நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

கலரைப் பொறுத்த வரை ஸ்டார்டஸ்ட் மற்றும் சன்ஷைன் கோல்டு என இரு வகையான கலர்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனை, வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வைத்திருந்தால் ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கும். ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சில கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ALSO READ | குறைந்த விலையில் TATA CNG கார்கள் அறிமுகம்

Vivo V23 Pro -வைப் பொறுத்தவரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் நிறுமாறும் ஸ்மார்ட்போனாகும். இந்த போன்களின் பின் இருக்கும் பேனல்கள் நிறம் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Vivo V23 ஆனது 6.44-இன்ச் முழு HD டிஸ்ப்ளேவைப் கொண்டிருக்கும். 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் Android 12 வெர்சனுடன் வெளிவந்துள்ளது. கேமராவைப் பொறுத்த வரை 64 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 42,000mAH பேட்டரியும் உள்ளது. இவ்வளவு அம்சங்களைக் கொண்ட இந்தபோனுக்கு இப்போது 2,500 ரூபாய் வழங்கப்பட்டிருப்பதால், இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News