ரூ. 8,000-க்கும் குறைவாக கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இதோ

Cheapest Smartphones: ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் உள்ள 5 ஸ்மார்ட்போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம். பட்டியலில் நோக்கியா, இன்பினிக்ஸ், ரியல்மி மற்றும் சியோமியின் ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 9, 2022, 10:34 AM IST
  • பிரீமியம் மற்றும் மலிவு விலை என அனைத்து ரகங்களிலும் ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுகின்றன.
  • ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் அசத்தலான ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
  • பெரிய பிராண்டுகள், மலிவு விலை.
ரூ. 8,000-க்கும் குறைவாக கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இதோ title=

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் மிகவும் முக்கியமானதாகிவிட்டது. இப்போது எங்கும் வெளியே செல்லாமல் அனைத்து வேலைகளும் ஸ்மார்ட்போன் மூலமே செய்யப்படுகின்றன. நிறுவனங்கள் சந்தையில் அனைத்து பிரிவுகளிலும் ஸ்மார்ட்போன்களை கொண்டு வருகின்றன. பிரீமியம் மற்றும் மலிவு விலை என அனைத்து ரகங்களிலும் ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுகின்றன. 

நீங்களும் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டு, உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், பயனர்களின் முதல் தேர்வாக இருக்கும் 8 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் உள்ள 5 ஸ்மார்ட்போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம். பட்டியலில் நோக்கியா, இன்பினிக்ஸ், ரியல்மி மற்றும் சியோமியின் ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ-ன் விலை ரூ.7,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 6.52-இன்ச் HD + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது தவிர, போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை விரிவாக்க முடியும். 8எம்பி முன்பக்க கேமராவுடன் 8எம்பி டூயல் கேமரா அமைப்பை இந்த போன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh வலுவான பேட்டரி உள்ளது.

மேலும் படிக்க | 16 எம்பி செல்பி கேமரா மோட்டோரோலாவின் விலை இவ்வளவு தானா.! 

ரியல்மி சி11 (2021)

ரியல்மி சி11 (2021) இன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வகைகளின் விலை ரூ.6,999 ஆகும். இதில் 6.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே உள்ளது. போனுக்கு பவர் கொடுக்க 5000mAH பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவைப் பற்றி பேசுகையில், 8 மெகாபிக்சல் ஒற்றை பின்புற கேமரா இதில் உள்ளது. செல்ஃபிக்காக 5 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்ஸோ 50ஐ

நார்ஸோ 50ஐ (2ஜிபி + 32ஜிபி)-ன் விலை ரூ.7,499 ஆகும். இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் f/2.0 துளை கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. செல்ஃபிக்காக, இந்த ஸ்மார்ட்போனில் f/2.2 துளை கொண்ட 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. பேட்டரி பேக்கப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மின்ட் கிரீன் மற்றும் கார்பன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

ரெட்மி 9ஏ ஸ்போர்ட்
ரெட்மி 9ஏ ஸ்போர்ட் 2ஜிபி ரேம் + 32ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.6,999 ஆகும். போனில் 6.53 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. கேமரா பற்றி பேசுகையில், பின்புறத்தில் 13எம்பி கேமரா உள்ளது மற்றும் செல்ஃபிக்காக 5எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஆனது 10வாட் சார்ஜிங் உடன் 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

நோக்கியா சி20 பிளஸ்

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா சி20 பிளஸின் அடிப்படை மாடல் ரூ.7,999 விலை கொண்டது. நோக்கியா சி20 பிளஸ் ஆனது 6.5-இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இல் இயங்குகிறது. இது 8 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. நோக்கியா சி20 பிளஸ் செல்ஃபிக்காக 5 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. இது 4950mAh வலுவான பேட்டரியைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | அசத்தலான Vivo T1 5G போனின் விலை வெறும் ரூ. 1,990: கலக்கும் பிளிப்கார்ட் சேல் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News