1 ரூபாய்க்கு ஜியோ வழங்கும் ரீசார்ஜ் திட்டம்

ஜியோ ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2021, 04:07 PM IST
1 ரூபாய்க்கு ஜியோ வழங்கும் ரீசார்ஜ் திட்டம் title=

மிகவும் அமைதியாக, ரிலையன்ஸ் ஜியோ ரூ.1 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் செல்லுபடியாகும் 100 MB டேட்டா பெற்றுக் கொள்ளலாம்.

ஜியோ (Reliance Jio) புதிய திட்டமானது நாட்டில் உள்ளதிலேயே மிகவும் மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாக உள்ளது. அதன்படி ரூ. 1 கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் செல்லுபடியாகும் 100 MB டேட்டாவை பெற்றுக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் அதிக அளவிலான டேட்டா தேவைப்படாதவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரீசார்ஜ் திட்டம் MyJio செயலியில் உள்ளது. ஆனால் நிறுவனத்தின் இணையத்தில் இல்லை.

ALSO READ | Jio vs Airtel vs Vi: உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் ரீசார்ஜ் திட்டம் எது?

ஜியோ நிறுவனத்தின் அன்லிமிடெட் திட்டங்களில் ஆரம்ப விலையில் உள்ள ரூ. 119 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை விட இது மிகவும் மலிவாக உள்ளது. ஜியோவிற்கான ரூ.1 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 100 எம்பி டேட்டாவுடன் வருகிறது. அத்துடன் பயனர்கள் அதன் மொத்த டேட்டா அளவையும் பயன்படுத்தியவுடன், அவர்கள் 64Kbps வேகத்தில் இணைய வசதியை பெற முடியும். மேலும் ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டத்தை MyJio செயலியில் உள்ள மற்ற திட்டங்களின் கீழ் உள்ளது. இந்த திட்டத்தை 10 முறை பயன்படுத்தினால், பயனர்களுக்கு கிட்டத்தட்ட 1 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும்.

இதன் மூலம் 1 ஜிபி டேட்டாவை மாதம் ரூ.15 இல் பெற்றுக் கொள்ளலாம். ஜியோவைத் தவிர, நாட்டில் உள்ள வேறு எந்த தொலை தொடர்பு நிறுவனங்களும் இது போன்ற குறைந்த விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்கவில்லை. 

ALSO READ | வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News