உங்களுக்கு தெரியாத இந்த 5 விஷயங்களுக்கு கூகுள் உதவும்

இதுவரை நீங்கள் பயன்படுத்தாத இந்த விஷயங்களுக்கெல்லாம் கூகுள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறதாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2022, 04:12 PM IST
  • கூகுளில் இருக்கும் புதிய டெக்அப்டேட்டுகள்
  • இந்த விஷயங்களுக்கெல்லாம் கூகுள் உதவும்
  • கூகுள் மூலம் நீங்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம்
உங்களுக்கு தெரியாத இந்த 5 விஷயங்களுக்கு கூகுள் உதவும் title=

கூகுளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால், இதுவரை நீங்கள் பயன்படுத்தாத விஷயங்களுக்கு எல்லாம் கூகுள் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறது. எந்தெந்த விஷயங்களுக்கு கூகுளை பயன்படுத்தலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

குரல் தேடல் 

உங்களுக்கு தெரியாத அல்லது மறந்துபோன விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், கூகுள் வாய்ஸ் மெசேஜை ஒபன் செய்து, நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் செய்தியை பேசவும். அடுத்த சில நொடிகளில் அல்லது விநாடிகளில் உங்களுக்கு தேவையான தகவல்களை கூகுள் கொண்டு வந்து கொடுக்கும். இதற்காக நீங்கள் கூகுள் தேடலில் டைப் செய்து தேடி அலைய வேண்டியதில்லை. 

மேலும் படிக்க | நண்பர்களுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் வீடியோ பார்ப்பது எப்படி?

கூகுள் டிஸ்கவர்

கூகுள் டிஸ்கவர் செயலி மூலம் உங்களுக்கு விருப்பமான தலைப்பை பின்தொடரலாம். இதன்மூலம் உலகம் முழுவதும் அந்த துறையில் நடைபெறும் அப்டேட்டுகளை நொடிப்பொழுதில் கைக்குள் கொண்டு வந்து தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, மியூசிக், அரசியல், பண்பாடு உள்ளிட்ட அனைத்து தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பின்தொடருங்கள். விருப்பமான இமேஜ், செய்திகள், லிங்குகள் ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதனை பின்னர் படித்துக் கொள்ளலாம்.

காலெண்டர்

கூகுள் அசிஸ்டண்ட் மூலம், கேலெண்டர் நிகழ்வுகள் மற்றும் வரவிருக்கும் மீட்டிங்குகள் போன்ற கேலெண்டர் அப்டேட்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம். மீட்டிங் தொடங்கும் முன் எச்சரிக்கை செய்ய, நோடிபிக்கேஷனையும் செட் செய்து வைத்துக் கொள்ளலாம். 

அழைப்புகளை மேற்கொள்ளலாம்

கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் அழைப்புகளை நீங்கள் மேற்கொள்ள முடியும். நீங்கள் சொல்லும் நபருக்கு தொலைபேசியில் இருந்து அழைப்பு செல்லும். இதேபோல், மெசேஜ்களையும் உருவாக்கி அனுப்பிக் கொள்ளலாம். 

கூகுள் டிரான்ஸ்லேட்டர்

உங்களுக்கு தெரியாத மொழிகளைக் கூட கூகுள் மூலம் மொழிப்பெயர்த்து அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். நம் அனைவருக்கும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இத்தகைய சூழலில் மலாய் மொழியில் உள்ள தகவலை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் கூட, கூகுள் டிரான்ஸ்லேட்டர் உதவியுடன் அந்த செய்தியை மொழிப்பெயர்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | ’மறைந்துபோகும் செய்திகளை சேமிக்கலாம்’ வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News