COVID எதிரொலி: Hero MotoCorp நிறுவனத்தில் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டன

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர் ஹீரோ மோட்டோகார்ப், அதன் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து உற்பத்தி ஆலைகளிலும் தற்காலிகமாக பணி நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 21, 2021, 05:05 PM IST
  • ஹீரோ மோட்டோகார்ப் உற்பத்தி ஆலைகளில் தற்காலிக பணி நிறுத்தம்.
  • நிறுவனம் இந்த அறிவுப்பை வெளியிட்டது.
  • கொரோனா காலத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை கருதி இந்த தற்காலிக பணிநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
COVID எதிரொலி: Hero MotoCorp நிறுவனத்தில் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டன title=

புதுடெல்லி: அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர் ஹீரோ மோட்டோகார்ப், அதன் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து உற்பத்தி ஆலைகளிலும் தற்காலிகமாக பணி நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. நாடு தழுவிய ஊரடங்கு இருக்காது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள நிலையிலும், தனது பணிகளை தொழிலாளர் பாதுகாப்புக்காக நிறுத்தியுள்ள முதல் நிறுவனமாகும் ஹீரோ. 

நாடு முழுவதும் கோவிட் -19 பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி ஆலைகளிலும், ‘குளோபல் பார்ட்ஸ் சென்டர்’ நிலையிலும் பணி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும். நிறுவனத்தின் அனைத்து ஆலைகளும் ஜிபிசி மையங்களும் ஏப்ரல் 22 முதல் மே 1 வரை மூடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

"உற்பத்தி நிலையங்களில் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இந்த பணிநிறுத்தம் செய்யப்பட்ட நாட்களை நிறுவனம் பயன்படுத்தும்" என்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

ALSO READ: மின்சார வாகனங்களுக்காக 20 ஆயிரம் மெக்கானிக்களுக்கு பயிற்சி கொடுக்கும் HERO Electric

"பணிநிறுத்தம் நிறுவனத்தின் தேவையை பூர்த்தி செய்யும் திறனை பாதிக்காது. உற்பத்தி, ஏற்கனவே பல மாநிலங்களில் உள்ள பணிநிறுத்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. காலாண்டின் எஞ்சிய காலத்தில் உற்பத்தி இழப்பு ஈடுசெய்யப்படும். இந்த குறுகிய பணிநிறுத்த காலத்திற்குப் பிறகு அனைத்து ஆலைகளும் இயல்பான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும், ”என்று நிறுவனம் மீண்டும் கூறியுள்ளது.

தனது கார்பரேட் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களை தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு (Work From Home) நிறுவனம் ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்காக சுழற்சி அடிப்படையில் அலுவலகங்களில் மிகக் குறைந்த அளவில் மட்டும் ஊழியர்கள் பணிபுரிவார்கள் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் ஹீரோ மோட்டோகார்ப் மிகப்பெரிய இரு சக்கர (Two Wheeler) வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் மொத்தம் ஆறு உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. மொத்தம் 11.6 மில்லியன் யூனிட்டுகள் இயங்கும் திறன் கொண்டது. ஹரித்வார், தருஹேரா, குருகிராம், நீம்ரானா, வதோதரா மற்றும் சித்தூர் ஆகிய இடங்களில் ஹீரோ மோட்டோகார்ப்பின் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ALSO READ: Bajaj Chetak: நம்ப முடியாத விலை, அதிரடி அம்சங்களுடன் அசத்தும் Cheapest Electric scooter

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 

செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News