ChatGPT அறிமுகப்படுத்தியிருக்கும் API: ஆன்லைன் ஷாப்பிங்கில் விரைவில் புதிய புரட்சி

சாட்ஜிபிடி இப்போது புதிய ஏபிஐ (API) ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது இணைய பயன்பாட்டை முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக தொழில்துறையினருக்கு இது ஒருவரபிரசாதமாக இருக்கப்போகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 03:44 PM IST
ChatGPT அறிமுகப்படுத்தியிருக்கும் API: ஆன்லைன் ஷாப்பிங்கில் விரைவில் புதிய புரட்சி  title=

சாட்ஜிபி வருகை டெக் உலகில் புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது. தகவல் தேடலுக்காக கூகுளை பயன்படுத்தி வந்த மக்கள் இப்போது சாட்ஜிபிடியை உபயோகிக்க தொடங்கிவிட்டனர். இதுவே சாட்ஜிபிடியின் பெரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே 100 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றது சாட்ஜிபிடி. கூகுளின் நேரடி வர்த்தக்கத்தை பாதிக்கும் தொழில்நுட்பமாக இருக்கும் இதனை எதிர்கொள்ள கூகுள் நிறுவனம் கூகுள் பார்டு என்ற ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது இப்போது புழக்கத்துக்கு வரவில்லை என்றாலும், சாட்ஜிபிடியை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | எலான் மஸ்க் சொல்வதில் நியாயம் இருக்கு: சாட்ஜிபிடி இணை நிறுவனர் ஒப்புதல்

ஆனால், இது குறித்தெல்லாம் சாட்ஜிபிடி சிந்திப்பதாக இல்லை. தான் வகுத்த பாதையில் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பயனாளர்களிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் புதிய அம்சங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கும் சாட்ஜிபிடி இப்போது ஏபிஐ ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை பல வகை வணிகங்களுக்கு பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

இதைப் பயன்படுத்தி, வணிகங்கள் தங்கள் ஆப்ஸ், இணையதளங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ChatGPT தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். அதாவது, பயனர்கள் எந்த இணையதளத்திலும் API மூலம் ChatGPT தொழில்நுட்பத்தைச் சேர்க்கலாம். இதன்மூலம் தங்கள் வணிகத்துக்கு தேவையான உதவிகளையும், மேம்படுத்தப்படக்கூடிய அம்சங்களையும் தெரிந்து கொண்டு உடனுக்குடன் அதனை நிவர்த்தியும் செய்து கொள்ளலாம். 

ஏபிஐ எப்படி பயன்படுத்துவது?

அதாவது நீங்கள் ஏதேனும் இகாமர்ஸ் தளத்துக் செல்கிறீர்கள். அந்த தளத்துடன் ஏபிஐ இணைக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் ஷாப்பிங் தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைக்கலாம். நிறை குறைகள் அல்லது பொருட்கள் வாங்குவது தொடர்பான ஆலோசனை, டிரெண்டிங் பிராண்டுகள், ஒரு பிராண்டின் புதிய தொழில்நுட்ப அப்டேட்டுகள், வர இருக்கும் ஆஃபர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சாட்ஜிபிடி உதவியுடன் உரிமையாளர்கள் கொடுக்க முடியும். அந்த தளத்துக்கு வரும் பயனாளர்களும் தெரிந்து கொள்ளலாம். ஒரு பொருளின் செய்முறை, அதனை பிராண்டு செய்யும் யுக்தி ஆகியவற்றையும் சாட்ஜிபிடி துல்லியமாக உங்களுக்கு சொல்லிக் கொடுக்கும். இதுதவிர இன்னும் சில அம்சங்களும் இதில் இருக்கின்றன. இதனால், ஆன்லைன் வணிகத்தில் புதிய புரட்சி விரைவில் எழப்போகிறது என்கின்றனர் டெக் நிபுணர்கள்.

மேலும் படிக்க | ChatGPT-க்கு மூளையாக இருந்தவர் யார் தெரியுமா? எலோன் மஸ்குக்கு என்ன தொடர்பு?

மேலும் படிக்க | இனி சர்வமும் AI மட்டுமே - எலான் மஸ்க் வைத்திருக்கும் மாஸ் பிளான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News