BSNL Extra Validity Offer Prepaid Plan Recharge Rs 699 999 : பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டியை நீட்டித்துள்ளது. இந்தத் திட்டங்கள் முறையே 699 ரூபாய் மற்றும் 999 ரூபாய் ஆகும். அண்மைக்காலமாக மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் பலன்களைக் குறைக்க தொடங்கியுள்ளன. இதனால் அவர்கள் ஒவ்வொரு பயனரிடமிருந்தும் அதிகமாக சம்பாதிக்க முடியும். வருவாயை கணக்கில் கொண்டு இத்தகைய முடிவை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எடுக்கும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இரண்டு ப்ரீப்பெய்ட் பிளான்களுக்கு கூடுதல் வேலிடிட்டியை அறிவித்திருக்கிறது. இதைச் செய்வதன் மூலம் பிஎஸ்என்எல் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என நம்புகிறது.
மேலும் படிக்க | ஜியோ அசந்த கேப்புல 170 ரூபாய் பிளானை இறக்கிய வோடாஃபோன் ஐடியா..!
பிஎஸ்என்எல் 699 ரூபாய் பிளான்
BSNL நிறுவனம் 699 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை நீட்டித்துள்ளது. முன்னதாக இந்த திட்டம் 130 நாட்களுக்கு செல்லுபடியானது. ஆனால் இப்போது 150 நாட்களுக்கு பயன்படுத்தலாம். அதாவது முழு 20 நாட்களின் பலன்கள் இனி கூடுதலாக கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி 0.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. கூடுதலாக, முதல் 60 நாட்களுக்கு நீங்கள் விரும்பும் ரிங்டோனை இலவசமாக அமைக்கும் வசதியையும் பெறுவீர்கள்.
பிஎஸ்என்எல் ரூ 999 பிளான்
BSNL அதன் 999 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்திலும் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த திட்டம் முன்பு 200 நாட்களுக்கு இயங்கும். ஆனால் இப்போது 215 நாட்களுக்கு பயன்படுத்தலாம். அதாவது 15 நாட்கள் கூடுதல் பலன். இந்த திட்டத்தில் நீங்கள் அன்லிமிட்டெட் அழைப்பு வசதியை மட்டுமே பெறுவீர்கள், மேலும் 60 நாட்களுக்கு உங்கள் விருப்பப்படி ரிங்டோனை அமைக்கலாம். இருப்பினும், இந்தத் திட்டத்தில் இணையத் தரவு அல்லது எஸ்எம்எஸ் எதையும் பெறமாட்டீர்கள். BSNL சமீபத்தில் அதன் 99 ரூபாய் திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. முன்பெல்லாம் 18 நாட்களுக்கு மட்டுமே இருந்த இந்த திட்டம் தற்போது 17 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
இப்படி பிளான்கள் வேலிடிட்டியை அதிகரித்துக் கொண்டிருந்தாலும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு இணையான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை. காரணம் அதற்கு மத்திய அரசிடமிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருக்கிறது.
மேலும் படிக்க | 6 ஏர்பேக்குகள் இருக்கும் 5 எஸ்யூவி கார்கள் - உசுருக்கு உத்தரவாதம் மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ