சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் கொண்ட iQOO 9 எப்போது launch?

iQOO நிறுவனம் ஜனவரி மாதம் சீனாவில் iQOO 7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் இப்போது அதன் மேம்படுத்தப்பட்ட மாடலை உருவாக்கி செய்கிறது. இது iQOO 9 என்ற பெயரில் தொடங்கப்படலாம். iQOO 9 4400mAh பேட்டரி மற்றும் 120W சார்ஜிங் உட்பட பல சிறப்பம்சங்கள் கொண்டது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2021, 10:09 PM IST
  • சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் கொண்ட iQOO 9
  • iQOO 9 எப்போது launch?
  • இதன் சிறப்பம்சங்கள் என்ன?
சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் கொண்ட iQOO 9 எப்போது launch? title=

புதுடெல்லி: iQOO நிறுவனம் ஜனவரி மாதம் சீனாவில் iQOO 7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் இப்போது அதன் மேம்படுத்தப்பட்ட மாடலை உருவாக்கி செய்கிறது. இது iQOO 9 என்ற பெயரில் தொடங்கப்படலாம். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon) 888 5 ஜி செயலி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட iQOO 9 போன் எப்போது கிடைக்கும்? அதில் உள்ள அம்சங்கள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்,

இது iQOO 9 ஆக அறிமுகப்படுத்தப்படலாம். பிரபலமான டிப்ஸ்டர் (tipster) ஒன்று, iQOO 9 எப்போது வெளியிடப்படும், பேட்டரி மற்றும் துரிதமான சார்ஜிங் போன்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. 

Also Read | Realme முதல் Redmi வரையிலான 4 கேமரா ஸ்மார்ட்போன்கள், விலை 10,000 க்கும் குறைவு!

IQOO 5 Pro மற்றும் iQOO 7 போன்ற ஸ்மார்ட்போன்கள் 4000mAh பேட்டரியுடன் வருகின்றன. இந்த பிரிவில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது அவை குறைந்த பேட்டரி திறன் கொண்டவை, ஆனால் iQOO இன் கைப்பேசிகள் அதிவேக சார்ஜிங்குடன் வருகின்றன, இது குறைந்த பேட்டரி திறனை ஈடுசெய்வதற்கு வசதியாக இருக்கிறது.

\iQOO 9 இரண்டு பேட்டரிகளுடன் இரட்டை செல் பேட்டரி தொழில்நுட்பத்தைக் கொண்டதாக இருக்கும் என டிப்ஸ்டர் டிஜிட்டல் உரையாடல் தளத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பேட்டரிகள் ஒவ்வொன்றும் 2155mAh திறன் கொண்டது, இரண்டின் ஒருங்கிணைந்த திறன் 4310 mAh ஆகும். சந்தையில், இது 4400mAh பேட்டரியாக வழங்கப்படலாம்,

அதாவது iQOO 9 ஐQOO 7 ஐ விட 400mAh பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. IQOO 7 120W சார்ஜிங்குடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே அளவு சார்ஜிங்கும் iQOO 9 மொபைலில் இருக்கும் என்று தெரிகிறது.  

Also Read | Budget 2021: கேபேசி இனி கையைக் கடிக்குமா? Costly ஆகிறதா Mobile Phone?

IQOO 9 எப்போது விற்பனைக்கு வரும்?
2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iQOO 9 அறிமுகப்படுத்தப்படும் என்று டிப்ஸ்டர் டிஜிட்டல் உரையாடல் தளம் கூறுகிறது. இருப்பினும், இது குறித்து நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

IQOO 7 இன் சிறப்பம்சம் என்ன?
இந்த ஸ்மார்ட்போனில் 6.62 அங்குல FHD+ டிஸ்ப்ளே உள்ளது, இது பஞ்ச்-ஹோல் கட்அவுட் (punch-hole cutout) மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது இதன் IQOO 7 இன் சிறப்பம்சங்கள் என்று கூறலாம். இந்த கைப்பேசியில் 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்னாப்டிராகன் (Snapdragon) 888 செயலியுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் Android 11 ஐ அடிப்படையாகக் கொண்ட iQOO UI இல் இயங்குகிறது. 4000mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் இருப்பது இதன் சிறப்பம்சம்.  

Triple rear camera அமைப்பைக் கொண்டுள்ள iQOO 7-வில், 48MP முதன்மை கேமராவுடன், இரண்டு 13MP சென்சார்களும் உள்ளன. செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு வசதியாக தொலைபேசியின் முன்புறத்தில் 16 எம்.பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன் (in-display fingerprint scanner) வருகிறது.

ALSO READ | Smartphone வாங்கும் முன் இந்த அம்சத்தைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News