ரூ.2 லட்சத்திற்கு ஆடம்பர தனி வீடு - IRCTC அறிமுகம்!

இந்திய நாட்டின் சாதாரன மனிதனுக்கும் ஆடம்பர வாழ்கை வந்து சேரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரயில்வே துறை (IRCTC) புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது!

Written by - Mukesh M | Last Updated : Mar 31, 2018, 11:50 AM IST
ரூ.2 லட்சத்திற்கு ஆடம்பர தனி வீடு - IRCTC அறிமுகம்! title=

இந்திய நாட்டின் சாதாரன மனிதனுக்கும் ஆடம்பர வாழ்கை வந்து சேரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரயில்வே துறை (IRCTC) புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது!

ஆடம்பர வசதிகள் கொண்ட 'luxury  saloon coach' -னை பாமர மக்களும் பயன்படுத்தும் விதத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த saloon coach-னில் AC வசதியுடன் கூடிய 2 படுக்கைகள், அறையுடன் இணைக்கப்பட்ட கழிப்பறை, ஓர் தனி சமையலை என தனி ஒரு வீட்டினையே இந்த கோச்சில் IRCTC அறிமுகம் செய்துள்ளது.

இன்று காலை டெல்லி பழைய ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த saloon coach -ன் புகைப்படங்களை இந்திய ரயில்வே துறை இணையத்தில் பகிர்ந்துள்ளது.

6 பேருக்கான இடவசதி கொண்ட இந்த saloon coach-ல் பயணிக்க முதல் 6 பயணிகளை M/s Royal India Train Journeys மூலம் இந்திய ரயில்வே துறை பெற்றுள்ளது. 

இந்த கோச்சில் பயணிக்க 6 பேருக்கு ஆகும் செலவு ரூ.2 லட்சம் மட்டுமே எனவும் IRCTC தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட தனி வீட்டைப் போலவே ரயிலில் தனி ஒரு கோச்சினை மக்களுக்காக ஒதுக்கியுள்ளது IRCTC. இந்த திட்டம் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Trending News