14 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV-C47...!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ((ISRO) புதன்கிழமை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கார்டோசாட்-3 (Cartosat-3) சுமந்து PSLV-C47 என்ற துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தை ஏவியது. 

Updated: Nov 27, 2019, 10:18 AM IST
14 செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV-C47...!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ((ISRO) புதன்கிழமை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கார்டோசாட்-3 (Cartosat-3) சுமந்து PSLV-C47 என்ற துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தை ஏவியது. 

குறித்த செயற்கைக்கோள் ஏவுதல் நிகழ்வு காலை 9.28 மணிக்கு வெற்றிகரமாக நடைப்பெற்றது.

ISRO தகவல்படி, PSLV-C47 ஆனது கார்டோசாட்-3 (Cartosat-3) மற்றும் அமெரிக்காவின் 13 வணிக நானோசாடெலைட்டுகளை சூரிய-ஒத்திசைவான சுற்றுப்பாதையில் ஏவியது. கார்டோசாட்-3 (Cartosat-3) செயற்கைக்கோள் மூன்றாம் தலைமுறை சுறுசுறுப்பான மேம்பட்ட செயற்கைக்கோள் ஆகும், இது உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் திறனைக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் 97.5 டிகிரி சாய்வில் 509 கி.மீ சுற்றுப்பாதையில் வைக்கப்படும். விண்வெளித் திணைக்களமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) உடன் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக PSLV-C47 அமெரிக்காவின் 13 வணிக நானோசாடெலைட்டுகளையும் கொண்டு சென்றுள்ளது.

முன்னதாக கடந்த நவம்பர் 25-ஆம் நாள் ISRO, PSLV-C47-ன் வாகன கட்டமைப்பு துவங்கி ஏவல் வரை கடந்த வந்த பாதைகளில் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பகிர்ந்துக்கொண்டது. மேலும் PSLV-C47-ன் பயணம் நவம்பர் 27-ஆம் நாள் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அன்றைய பதிவில் ISRO  குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக, நவம்பர் 20-ஆம் தேதி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுகணை காட்சி கேலரியில் இருந்து PSLV-C47 / கார்டோசாட்-3 (Cartosat-3) அறிமுகப்படுத்தப்பட்டதைக் காண ஆன்லைன் பதிவை ISRO  திறந்திருந்தது.

மேலும், நவம்பர் 25-ஆம் தேதி காலை 9.28 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த கார்டோசாட்-3 (Cartosat-3) கொண்ட PSLV-C47 ஏவுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நவம்பர் 27-ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டதாக நவம்பர் 21 அன்று ISRO தெரிவித்திருந்தது.

PSLV-C47 என்பது 'XL' கட்டமைப்பில் PSLV-ன் 21-வது விமானமாகும் (6 திடமான ஸ்ட்ராப்-ஆன் மோட்டார்கள்). ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 74-வது ஏவுகணை வாகன பணி இது எனவும் ISRO குறிப்பிட்டுள்ளது.