அட்டகாசமாய் அறிமுகம் ஆனது Jeep Meridian: விலை, அம்சங்கள், முழு விவரம் இதோ

Jeep Meridian: புதிய வகை ஜீப் மெரிடியன் 29.90 லட்சம் விலையில் ஜீப் பிராண்டு இந்தியா தலைவர் மஹாஜன், வெங்கட் தேஜா மற்றும் நடிகை சாஹித்யா ஆகியோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 21, 2022, 10:55 AM IST
  • இந்திய ஆட்டோமொபைல் சந்தை நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது.
  • புதிய வகை ஜீப் மெரிடியன் அறிமுகம் ஆனது.
  • இதன் விலை 29.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அட்டகாசமாய் அறிமுகம் ஆனது Jeep Meridian: விலை, அம்சங்கள், முழு விவரம் இதோ title=

இந்திய ஆட்டோமொபைல் சந்தை நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. பல வித வாகன வகைகளில் பல புதிய மாடல்கள் அவ்வப்போது அறிமுகம் ஆகின்றன. அந்த வகையில், இந்திய வாகன சந்தையை கலக்க, புதிய ஜீப் ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது.

புதிய வகை ஜீப் மெரிடியன் 29.90 லட்சம் விலையில் ஜீப் பிராண்டு இந்தியா தலைவர் மஹாஜன், வெங்கட் தேஜா மற்றும் நடிகை சாஹித்யா ஆகியோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

புதிய வகை ஜீப் மெரிடியன் வாகனத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் ஜீப் பிராண்டு இந்தியா தலைவர் மஹாஜன், நேஷனல் சேல்ஸ் ஹெட் ஜீப் இந்தியாவின் ஜெயேஷ் சுக்லா, ஜீப்பின் விற்பனை இந்தியா மண்டலத் தலைவர் லோகேந்திரா, விற்பனை ஜீப் இந்தியாவின் பிராந்திய மேலாளர் சஜித் ஜேக்கப், வி.டி.கே ஆட்டோமொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் வெங்கட் தேஜா, சைலேந்திரகுமார் மற்றும் நடிகை சாஹித்யா ஆகியோர் கலந்துகொண்டு  அறிமுகப்படுத்தினர். 

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஜீப்பின் எக்ஸ் ஷோரூம் விலை 29.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜீப் மெரிடியன் வாகனம் புதிய 3 வரிசை ஜீப் எஸ்யூவி அனுபவத்தை வழங்கக் கூடியதாக உள்ளது. மேலும் அதி நவீன வசதிகள் கொண்டதாகவும் சிறந்த வடிவமைப்பு, இந்திய பொறியியல் நுண்ணறிவு ஆகியவை ஒருங்கே அமைந்த எஸ்யூவி ஆகவும் இது உள்ளது

மேலும் படிக்க | குறைந்த பட்ஜெட்டில் அசத்தும் மைலேஜ் அளிக்கும் அட்டகாசமான கார்கள்  

அதிக திறன் கொண்ட கிளாஸான இந்த எஸ்யூவி ஆனது 10.8 வினாடிகளில் 0-100 km/h சென்று 198km/h வரை எட்டக் கூடியதாக உள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களுக்கான வாகனம்

ஜீப் மெரிடியன் வாகனம் அறிமுகம் குறித்து பேசிய ஜீப் பிராண்டு இந்தியாவின் தலைவர் மகாஜன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் கூடிய,  விசாலமான, திறன் கொண்ட வாகனமாகவும், புதிய வகை அதிநவீன எஸ்யூவியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிட முடியாத அனுபவத்தை வழங்கக் கூடியதாகவும் ஜீப் மெரிடியன் வாகனம் இருக்கும் என்று கூறினார். மேலும் அழகிய வடிவமைப்புடன் கூடிய வாகனமாகவும் இந்த ஜீப்  இருக்கும் என்று அவர் தெரிவித்தார். வாடிக்கையாளர்களிடையே புதிய ஜீப் மெரிடியனுக்கான வரவேற்பு சிறப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் ஜூன் மாத முதல் வாரத்தில் இந்த வாகனத்தை டெலிவரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளதாக அவர் கூறினார். 

முன்பதிவு செய்வது எப்படி?

ஆல் -நியூ ஜீப் மெரிடியனை,  தற்போது இந்தியாவில் (jeep-india.com) வலைத்தளத்திலும் மேலும் இந்தியா முழுவதும் உள்ள ஜீப் டீலர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தியும் புக்கிங் செய்து கொள்ளலாம். 

டெலிவரி எப்போது?

வாகனம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெலிவரி செய்யப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க | Bgauss BG D15: அட்டகாசமான மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் ஆனது, விவரம் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News