ஜியோவின் மிக மலிவான ரீசார்ஜ் திட்டம்: Netflix, Amazon Prime அனைத்தும் இலவசம்

Jio Postpaid: ஜியோவின் மிகவும் சக்திவாய்ந்த அட்டகாசமான போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கில் சேமிக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2023, 12:38 PM IST
  • இது ஒரு போஸ்ட்பெய்டு திட்டம் என்பதால், திட்டம் முடிந்தவுடன் வாடிக்கையாளர்கள் இதை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
  • ஒருவேளை இதை வாடிக்கையாளர்கள் மறந்துவிட்டாலும், இதன் சேவைகள் நிறுத்தப்படாது.
  • ப்ரீபெய்ட் திட்டங்களில், உங்களுக்கு இந்த வசதி கிடைக்காது.
ஜியோவின் மிக மலிவான ரீசார்ஜ் திட்டம்: Netflix, Amazon Prime அனைத்தும் இலவசம் title=

ஜியோ போஸ்ட்பெய்ட் - இலவச நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம்: வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் அவர்களின் பொழுதுபோக்குகளை முழுமையாக கவனித்துக் கொள்ளும் போஸ்ட்பெய்ட் திட்டத்தை ஜியோ வழங்குகிறது. இந்த திட்டத்தில் பல சக்திவாய்ந்த நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நன்மைகளில் ஒன்று மிகவும் சிறப்பு வாய்ந்தது. இப்படிப்பட்ட பலனை வேறு எந்த ஒரு நிறுவனமும் வழங்குவதில்லை. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் பணமும் மிச்சமாகிறது.

ஜியோவின் மிகவும் சக்திவாய்ந்த அட்டகாசமான போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கில் சேமிக்கலாம். மேலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய பிறகு, நீங்கள் ஓடிடி-இல் திரைப்படங்களைப் பார்க்க பணம் செலவழிக்க வேண்டியதில்லை.

ஜியோவின் அட்டகாசமான போஸ்ட்பெய்ட் திட்டம்

அட்டகாசமான பல பலன்களை அளிக்கும் இந்த ஜியோ திட்டத்தின் விலை ரூ. 399 ஆகும். இதில் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 75 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களுக்கான ஒரு வருட இலவச சந்தாவுடன் வருகிறது.

jio postpaid plans

மேலும் படிக்க | BSNL: ரூ.397-க்கு ரீச்சார்ஜ் செய்தால் வருஷம் முழுவதும் டேட்டா, அழைப்புகள் இலவசம்..! 

இது ஒரு போஸ்ட்பெய்டு திட்டம் என்பதால், திட்டம் முடிந்தவுடன் வாடிக்கையாளர்கள் இதை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஒருவேளை இதை வாடிக்கையாளர்கள் மறந்துவிட்டாலும், இதன் சேவைகள் நிறுத்தப்படாது. அதேசமயம் ப்ரீபெய்ட் திட்டங்களில், உங்களுக்கு இந்த வசதி கிடைக்காது. 

ஜியோவின் இந்த திட்டம் மிக பயனுள்ள அதிரடி திட்டமாக இருப்பதுடன், இது மிகவும் பிரபலமான திட்டமாகவும் உள்ளது. மேலும், ஓடிடி தளங்களில் படங்கள், தொடர்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை பார்க்க விரும்பும் பயனர்கள் இதை ஆக்டிவேட் செய்யலாம். இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

ரிலயன்ஸ் ஜியோ அவ்வப்போது பல மலிவான திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளும் ஏராளம். இதன் காரணமாகத்தான் ஏராளமான நடுத்தர வாடிக்கையாளர்கள் ஜியோ திட்டங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். 

மேலும் படிக்க | ஏர்டெல் பயனர்களுக்கு ஜாக்பாட், 2ஜிபி டேட்டா இலவசமாக பெறுங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News