Mahindra Atom: நாட்டின் மிக மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்

Mahindra Atom EV: மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் மின்சாரப் பிரிவான மஹிந்திரா எலக்ட்ரிக், நாட்டின் மலிவான மின்சாரக் காரான ஆட்டமின் தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 7, 2022, 10:37 AM IST
  • இந்தியாவில் மின்சார வாகனங்களின் மோகம் அதிகரித்து வருகிறது.
  • மஹிந்திரா ஆட்டம் வர்த்தக வாகனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இது வெளியிடப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை.
Mahindra Atom: நாட்டின் மிக மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம் title=

மஹிந்திரா ஆட்டம் இவி: இந்தியாவில் மின்சார வாகனங்களின் மோகம் அதிகரித்து வருகிறது. இப்போது நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்களும் இந்த வாகனங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். 
பெரிய வாகன உற்பத்தியாளர்களுடன், பெரிய மற்றும் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இப்போது மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் அதிக ஆவலாக உள்ளனர். 

மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனம் ட்ரியோ ஆட்டோ, ட்ரியோ ஜோர் டெலிவரி வேன், ட்ரியோ டிப்பர் வேரியண்ட் மற்றும் இ-ஆல்பா மினி டிப்பர் ஆகியவற்றுடன் ஆட்டம் குவாட்ரிசைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சார 3-சக்கர வாகனப் பிரிவில் மஹிந்திரா 73.4 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நிறுவனம் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

மின்சார வாகனம் 4 வகைகளில் வெளியிடப்படும்

மஹிந்திரா ஆட்டம் கெ1, கெ2, கெ3 மற்றும் கெ4 என நான்கு வகைகளில் வெளியிடப்படும். முதல் இரண்டு வகைகள் 7.4 kWh பேட்டரி பேக்குடன் வரும். மற்ற இரண்டும் 11.1 kWh பேட்டரி பேக்குடன் வரும். ஆட்டமின் கெ1 மற்றும் கெ3 அடிப்படை மாறுபாடுகள் ஏர் கண்டிஷனிங் அமைப்புடன் வரவில்லை. கெ2 மற்றும் கெ4 ஆகியவை இந்த அம்சத்தைக் கொண்டுள்ளன. இந்நிறுவனம் இந்திய சந்தையில் ஆட்டம் குவாட்ரிசைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

மேலும் படிக்க | டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் டிரெய்லரே சும்மா அசத்துதில்ல: ஆனா விலையும் சூப்பர் தான்

மஹிந்திரா ஆட்டம் குவாட்ரிசைக்கிள்

மின்சாரத்தில் இயங்கும் மஹிந்திரா ஆட்டம் வசதியான மற்றும் ஸ்மார்ட் அம்சங்களுடன் சுத்தமான ஆற்றலுடன் பொருத்தப்பட்டுள்ளது. இ-ஆல்பா மினி பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான எலக்ட்ரிக் ஆல்பா டிப்பரை ஆட்டம் உடன் இணைந்து மஹிந்திரா சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இ-ஆல்ஃபா மினி டிப்பர் 1.5 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது. இதன் லேண்டிங் திறன் 310 கிலோ ஆகும். தற்போது மஹிந்திரா ஆட்டம் வர்த்தக வாகனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளியிடப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை.

விலை 3 லட்சம் மட்டுமே!

மஹிந்திரா ஆட்டம் காரின் தோற்றம் மற்றும் அம்சங்களில் பணத்திற்கான மதிப்பு முழுமையாக உள்ளது. அதன் விலையும் மிகவும் குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த காரின் விலை சுமார் ரூ.3 லட்சமாக இருக்கும் என்று யூகங்கள் எழுந்துள்ளன. 

மஹிந்திரா ஆட்டம் அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். ஆட்டம் எலக்ட்ரிக் குவாட்ரிசைக்கிளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை ஓட்ட முடியும். எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவிற்கு இது ஒரு சுவாரசியமான மாற்றாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 3 கார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News