தார் மற்றும் XUV700 கார்களின் விலை கிடுகிடு உயர்வு

தார் மற்றும்  XUV700 கார்களின் விலையை மகேந்திரா நிறுவனம் கிடுகிடுவென உயர்த்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 14, 2022, 06:22 PM IST
  • கார்களின் விலையை உயர்த்திய மஹிந்திரா
  • மூலப்பொருட்களின் விலை உயர்வால் கார்களின் விலை உயர்வு
  • தார் உள்ளிட்ட கார்களின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது
தார் மற்றும் XUV700 கார்களின் விலை கிடுகிடு உயர்வு title=

கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து ஆட்டோமொபைல் துறை இன்னும் விடுபடவில்லை. மூலப்பொருட்கள் மற்றும் உதிரிப் பொருட்களின் விலையேற்றத்தால், கார்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு ஆட்டோமொபைல் துறையினர் தள்ளப்பட்டனர். இதனால், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தின. தற்போது புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன.

நிதியாண்டின் தொடக்கத்தில் விலையை உயர்த்துவதை கார் உற்பத்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக டிரெண்டாக கொண்டுள்ளனர். அந்தவகையில் தற்போது முன்னணி கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மாருதி சுஸுகி, ஹோண்டா கார்ஸ் இந்தியா மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் கார்களின் விலைகள் கிடுகிடுவென உயர உள்ளன. மஹிந்திரா நிறுவனம், அந்த நிறுவனங்களிடம் இருந்து முந்திக் கொண்டு 10 ஆயிரம் முதல் 63 ஆயிரம் வரை விலைகளை உயர்த்தியுள்ளன. 

மேலும் படிக்க | Whatsapp Pay சேட்டிங் போலவே இனி வாட்ஸ்அப் செயலியில் பணபரிமாற்றமும் சுலபம்

இது குறித்து மஹிந்திரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஏப்ரல் 14 முதல் அனைத்து எஸ்யூவி கார்களுக்கும் 2.5 சதவீதம் விலையை கூட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து அனைத்து வாகனங்களின் விலையும் ரூ.10,000 முதல் ரூ.63,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களின் விலை உயர்வுக்கான காரணத்தை கூறியுள்ள மஹிந்திரா மற்ற நிறுவனங்களைப் போலவே சந்தையில் நிலவும் மூலப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வை சுட்டிக்காட்டியுள்ளது. 

இரும்பு, அலுமினியம், பல்லேடியம் போன்ற உலோகங்களின் விலை முன்னெப்போதும் இல்லாத விலை உயர்வை சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளது. எனினும், முடிந்தளவுக்கு மிக குறைவான அளவிலேயே விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. தார் மற்றும்  XUV700 உள்ளிட்ட மஹிந்திரா நிறுவனத்தின் கார்களை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தயாராகுங்கள். 

மேலும் படிக்க | ஹோட்டல் மேலாளரை கொடூரமாக தாக்கும் ரவுடிகள் - பதறவைக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News