குறைந்தது ஸ்மார்ட்போன்களின் விலை... ஓப்போவின் அசத்தல் திட்டம்

ஓப்போ நிறுவனத்தின் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 19, 2022, 07:50 PM IST
  • ஓப்போ நிறுவனத்தின் மொபைல் விலை குறைப்பு
  • ஏ சீரிஸ் மொபைல்களுக்கு விலை குறைப்பு
  • வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
குறைந்தது ஸ்மார்ட்போன்களின் விலை... ஓப்போவின் அசத்தல் திட்டம் title=

இந்திய சந்தைகளில் அதிகம் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஓப்போ நிறுவனத்தின் மொபைல்களும் அடங்கும். அதேசமய்ம் அந்த நிறுவனத்தின் விலை சற்று அதிகமாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்களிடம் அவ்வப்போது கருத்து எழுவதுண்டு. தற்போது ஓப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தேர்வு செய்யப்பட்ட தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவித்திக்கிறது. அதன்படி ஓப்போ F21 ப்ரோ, ஓப்போ ஏ55 மற்றும் ஓப்போ ஏ77 போன்ற மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டிருக்கிறது. 

ஓப்போ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறைக்கப்பட்ட புது விலை மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி ஓப்போ F21 ப்ரோ மற்றும் ஓப்போ ஏ55 ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஓப்போ ஏ77 ஸ்மார்ட்போன் ரூ. 15 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒப்போ F21 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் தற்போது ரூ. 21 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. ஓப்போ ஏ55 ஸ்மார்ட்போன் ரூ. 14, 999 விலையில் கிடைக்கிறது. இதேபோன்று ஒப்போ ஏ77 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 15 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கப்பெறுகிறது. மேலும், ஏ77S 17,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

 

அதேபோல் அம்சங்களை பொறுத்தவரை ஓப்போ ஏ55 மாடலில் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 

ஓப்போ F21 ப்ரோ மாடலில் 6.43 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 64MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது சென்சார், 2MP மோனோக்ரோம் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Flipkart Big Diwali Sale:42 இஞ்ச் ஸ்மார்ட் டிவியின் விலை வெறும் ரூ.2400, அசத்தல் தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News