Redmi Note -ன் புதிய 4ஜி, 5ஜி ஸ்மார்ட்போன்கள்...! சிறப்பம்சம், விலை பட்டியல் இதோ

ரெட்மி நோட் 11 4ஜி-ன் அசத்தல் அம்சங்கள் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ விலை தெரியவந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:36 PM IST
  • Redmi Note -ன் புதிய 4ஜி, 5ஜி ஸ்மார்ட்போன்கள்
  • சில மாறுதல்களுடன் இந்தியாவில் அறிமுகம்
  • விலைப்பட்டியல் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியானது
Redmi Note -ன் புதிய 4ஜி, 5ஜி ஸ்மார்ட்போன்கள்...! சிறப்பம்சம், விலை பட்டியல் இதோ  title=

ரெட்மி நோட் 11 4 ஜி ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே Geekbench தளத்தில் அதன் வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. அந்த தளம் இந்த ஸ்மார்ட்போனுக்கு 376 சிங்கிள்கோர் மதிப்பெண்ணை வழங்கியுள்ளது. 1580 மல்டி ஸ்கோர் புள்ளிகளைக் கொடுத்துள்ளது.  நல்ல தரமான ஸ்மார்ட்போன் என்ற மதிப்பீட்டை பெற்றுள்ள ரெட்மி 4ஜி ஸ்மார்ட்போன், சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களில் இருந்து சில மாறுதல்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

விலை விவரம்; 

Redmi Note 11 Pro 5G  ஸ்மார்ட்போன் கிராஃபைட் கிரே, போலார் ஒயிட், அட்லாண்டிக் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6ஜிபி+64ஜிபி மொபைலுக்கு ரூ.24,600 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6ஜிபி+128ஜிபி மொபைலுக்கு ரூ.26,100 விலையில் கிடைக்கும். 8ஜிபி+128ஜிபி போன் ரூ.28,400-க்கு கிடைக்கும்.

ரெட்மி நோட் 11 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் ஸ்டார் ப்ளூ, கிராஃபைட் கிரே, போலார் ஒயிட் வண்ணங்களில் வருகிறது. 6ஜிபி+64ஜிபி வேரியண்ட் மொபைல் ரூ.22,400-க்கு சந்தையில் கிடைக்கும். 6ஜிபி+128ஜிபி வேரியண்ட் 24,600 ரூபாய்க்கும், 8ஜிபி+128ஜிபி மாடல் ரூ.26,100 -க்கும் கிடைக்கும். 

Redmi Note 11 4G  மொபைல் Graphite Grey, Twilight Blue மற்றும் Star Blue வண்ணங்களில் வருகிறது. 4ஜிபி + 64ஜிபி வேரியண்ட் மொபைல் 13,400 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும். 4ஜிபி+128ஜிபி மற்றும் 6ஜிபி+128ஜிபி மொபைல்கள் முறையே 14,900 ரூபாய்க்கும், 17,100 ரூபாய்க்கும் விற்பனையாகும். 

Redmi Note 11S ஸ்மார்ட்போன் 6GB + 64GB வேரிய்ண்ட் ரூ. 18,600 விலைக்கும், 6GB + 128GB வேரியண்ட் 20,900 விலைக்கும் விற்பனையாகும். 

விவரக்குறிப்பு

ரெட்மி நோட் 11 4G மொபைல் Qualcomm Snapdragon 680 சிப்செட், 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.5-இன்ச் FullHD Plus LCD டிஸ்ப்ளே, Android 11 OS உடன் MIUI 12.5 ஸ்கின் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் இருக்கும். கூடுதலாக, இது 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டிருக்கலாம். ஒரு 5000 mAh பேட்டரி திறன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்சன் இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News