சாம்சங் ஃபோன் யூஸ் பண்றீங்களா... அப்போது இது உங்களுக்குத்தான்

5ஜி சேவையை வழங்குவதற்காக சாம்சங் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்துள்ளது  

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 12, 2022, 08:47 PM IST
  • 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது
  • அதற்காக ரிலையன்ஸ், ஏர்டெல்லுடன் இணைந்திருக்கிறது சாம்சங்
  • நவம்பர் மாத மத்தியில் அப்டேட் வரவிருக்கிறது
 சாம்சங் ஃபோன் யூஸ் பண்றீங்களா... அப்போது இது உங்களுக்குத்தான் title=

இந்தியாவில் விற்பனையாகும் மொபைல் ஃபோன்களில் டாப் 5 இடங்களுக்குள் சாம்சங் இருக்கும். பலரும் அந்த நிறுவனத்தின் ஃபோனை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் 5ஜி குறித்த அப்டேட் எதுவும் சாம்சங் நிறுவனத்திடமிருந்து வெளிவராமல் இருந்தது. இந்தச் சூழலில், ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர மாத மத்தியில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. 

5ஜி சேவையை வழங்குவதற்காக சாம்சங் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சாம்சங் ஃபோனில் 5ஜி சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல், சாம்சங் சாதனங்கள் என குறிப்பிட்டிருப்பதால் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் மாடல்களுக்கும் 5ஜி அப்டேட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | YouTube premium: வெறும் 10 ரூபாய்க்கு 3 மாத சப்கிரிப்சன்; இந்த தொந்தரவு இருக்கவே இருக்காது

முன்னதாக ஏர்டெல் நிறுவனத்தின் நான்-ஸ்டாண்ட்-அலோன் 5ஜி பிளஸ் நெட்வொர்க் இந்தியாவின் எட்டு நகரங்களில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த நெட்வொர்க்கில் எந்தெந்த சாதனங்களில் 5ஜி வேலை செய்யும் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ஏராளமான சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

எனினும், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 மற்றும் அதற்கும் முன்பு வெளியிட்ட சாதனங்களை அப்டேட் செய்ய வேண்டும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி சேவையை நாட்டின் நான்கு நகரங்களில் வெளியிட்டது. தற்போது பீட்டா சோதனை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அதிக நகரங்களில் 5ஜி சேவைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | வாட்ஸ்அப் மட்டுமல்ல இனி ட்விட்டரிலும் ஸ்கிரீன்ஷாட் கூடாது - ஏன் தெரியுமா?

மேலும் படிக்க | விற்பனையில் சாதனை படைத்த சியோமி... ஆச்சரியத்தில் பயனர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News