கண்டங்கள் ஏழல்ல எட்டு! புதிதாய் உருவான ப்ரோட்டோ மைக்ரோ கண்டம்! ஆச்சரியமான தகவல்கள்!

Davis Strait proto-microcontinent : டெக்டோனிக் பரிணாம வளர்ச்சியின் காரணமாக டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்ற புதிய கண்டம் உருவாகியுள்ளது, இது கனடா மற்றும் கிரீன்லாந்துக்கு இடையே அமைந்துள்ளது... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 11, 2024, 12:47 PM IST
  • உலகில் உருவானது புதிய கண்டம்
  • டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம்!
  • கிரீன்லாந்து மற்றும் கனடா இடையே உருவாகிய புதிய நிலபரப்பு
கண்டங்கள் ஏழல்ல எட்டு! புதிதாய் உருவான ப்ரோட்டோ மைக்ரோ கண்டம்! ஆச்சரியமான தகவல்கள்! title=

நாம் வாழும் பூமி, ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்து அடையாளப்படுத்தப்படும் கண்டங்கள், பரப்பளவின் அடிப்படையில் ஏறுவரிசையில் பகுக்கப்பட்டிருக்கும் கண்டங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்டிகா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகியவை ஆகும்.

தற்போது, நுண் கண்டம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி இந்த புதிய கண்டத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருந்திருக்கிறது. மேற்கு கிரீன்லாந்து பகுதியில் உள்ள ஜலசந்தியின் டெக்டோனிக், பரிணாம வளர்ச்சியின் காரணமாக நிலபரப்பாக உருவாகியிருக்கிறது.

இந்த புதிய கண்டத்திற்கு டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் (Davis Strait proto-microcontinent) என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிய கண்டம் உருவானது எப்படி? தெரிந்துக் கொள்வோம்.

உலகின் எட்டாவது கண்டம்

டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம், புதிய கண்டமாக இருந்தாலும், இது அளவில் மிகவும் சிறியது. எனவே, இதனை ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் (proto-microcontinent) என்று வகைப்படுத்தியுள்ளனர். இந்த நுண் கண்டம்,19 முதல் 24 கிமீ தடிமன் கொண்ட மேலோடு, 15-17 கிமீ அளவிலான கண்ட மேலோடு என இரண்டு குறுகிய பட்டைகளைக் கொண்டுள்ளது.

இந்த மேலோடானது, புதிய நிலப்பரப்பை கிரீன்லாந்து மற்றும் பாஃபின் தீவில் இருந்து பிரிக்கிறது. நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் மலை வடிவங்கள் போன்ற இயற்கை நிகழ்வுகளுக்கு காரணமான பிளேட் டெக்டோனிக்ஸ் (plate tectonics) தான், இந்த புதிய கண்டம் உருவாக காரணமாக உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பூமியின் மேல்தட்டுகளின் இயக்கம் இயற்கை நிகழ்வுகளால் ஏற்படுகின்றன. கனடா மற்றும் கிரீன்லாந்து இடையே உள்ள பூமியின் மேல்தட்டு, டேவிஸ் ஜலசந்தியை உருவாக்குகிறது. இந்த ஜலசந்தியின் டெக்டோனிக் பரிணாமம் ~33-61 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பேலியோஜீன் காலத்தில் இருந்தது. இதன் விளைவாக ஒரு அசாதாரண நிலபரப்பு உருவானது என்று கூறப்படுகிறது. இந்த பரிணாம வளர்ச்சியின் காரணமாக கடலில் கான்டினென்டல் மேலோடு, இயல்பை விட தடிமனானதாக இருப்பதாக விஞ்னானிகள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகள் எங்கே வசிக்கின்றனர்? தீவிரமாய் ஏலியன்களை தேடும் நாசாவின் முயற்சி!

மேலோடு உருவாக்கம்
இந்த மேலோடு எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்ட ஆராய்ச்சி, கோண்ட்வானா ஆராய்ச்சி (Gondwana Research) என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. ஆராய்ச்சிக்காக, ~ 30 மில்லியன் ஆண்டுகளாக பரவியுள்ள தட்டு டெக்டோனிக் இயக்கங்களின் மறுகட்டமைப்பை உருவாக்கி ஆராய்ந்தனர். 

முனைவர் பட்ட ஆய்வாளர்கள் லூக் லாங்லி, டாக்டர் ஜோர்டான் பெதியன் (டெர்பி பல்கலைக்கழகம், யுகே) மற்றும் ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழகத்தின் டாக்டர் கிறிஸ்டியன் ஷிஃபர் ஆகியோர், புரோட்டோ-மைக்ரோ கான்டினென்ட்கள் தொடர்பாக வரையறுத்துள்ளனர்.

மேலோடு வரையறை

ஒப்பீட்டளவில் தடிமனான கண்ட லித்தோஸ்பியரின் பகுதிகள், மெலிந்த கண்ட லித்தோஸ்பெரினென்டல் மண்டலத்தால் பிரிக்கப்பட்ட பகுதிகளே மேலோடுகள் என விஞ்ஞானிகள் மோலோட்டை வரையறுக்கின்றனர். புவியீர்ப்பு மற்றும் நில அதிர்வு பிரதிபலிப்பு தரவுகளிலிருந்து பெறப்பட்ட வரைபடங்களைப் பயன்படுத்தி, பிளவுகள், நடுக்கடல் மேடு மற்றும் தொடர்புடைய உருமாற்ற பிறழ்வுகளை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளனர். 

இந்த ப்ரோட்டோ-மைக்ரோ கண்டத்தின் உருவாக்கம், முக்கியமாக ~49-58 Ma காலகட்டத்துடன் இணைக்கப்பட்டது. கனடாவிற்கும் கிரீன்லாந்திற்கும் இடையில் பரவியிருக்கும் கடற்பரப்பின் நோக்குநிலை மாற்றப்பட்டு, டேவிஸ் ஜலசந்தியின் ப்ரோட்டோ-மைக்ரோ கண்டத்தில் இருந்து பிளவுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிரீன்லாந்து பின்னர் எல்லெஸ்மியர் தீவுடன் மோதி வட அமெரிக்க தட்டுடன் சேர்ந்தது என்பது சரித்திரம்.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் ஓராண்டு வாழ்ந்தால் எப்படி இருக்கும்? விண்வெளி வீரர்களின் அனுபவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News