Flipkart Sale: ஆப்பரோ ஆஃபர்! ரூ.291க்கு லேப்டாப்

பிளிப்கார்ட்டில் Big Saving Days தொடங்கியுள்ளது. இந்த விற்பனை டிசம்பர் 21 வரை இயங்கும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 20, 2021, 08:44 AM IST
Flipkart Sale: ஆப்பரோ ஆஃபர்! ரூ.291க்கு லேப்டாப் title=

புதுடெல்லி: பிக் சேவிங் டேஸ் (Big Saving Days) விற்பனையானது ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) டிசம்பர் 16 முதல் 21ம் தேதி வரை நேரலையில் உள்ளது மற்றும் பல அற்புதமான பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ஸ்மார்ட்ஃபோன்கள், ஸ்மார்ட் டிவிகள் முதல் லேப்டாப்கள் வரை அனைத்திலும் நீங்கள் பெரும் தள்ளுபடியை இந்த விற்பனையில் பெறுவீர்கள். அதன்படி தற்போது 291 ரூபாய்க்கு Avita PURA APU லேப்டாப்பை நீங்கள் இந்த அறுமையான விற்பனையில் வாங்கலாம். எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

291 ரூபாய்க்கு 14 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லேப்டாப்
Avita PURA APU Laptop இன் ஒரிஜினல் விலை ரூ. 27,990 ஆகும். ஆனால் Flipkart விற்பனையில் ​​25% தள்ளுபடிக்குப் பிறகு 20,990 ரூபாய்க்கு இந்த லேப்டாப்பை வாங்லாம். அத்துடன் நீங்கள் Flipkart இல் ரூ. 500 கூடுதல் தள்ளுபடியைப் பெறுகிறீர்கள், மேலும் SBIயின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் ரூ. 2,099 அதிகமாகச் சேமிக்க முடியும். இதன் மூலம் லேப்டாப்பின் (Laptop) விலை ரூ.18,391 ஆக குறையும்.

ALSO READ | Samsung போனில் ரூ.35,000 வரை தள்ளுபடி: நம்ப முடியாத சலுகைகள் 

எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் இருந்து பெரும் தள்ளுபடி
இந்த ஒப்பந்தத்தில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய லேப்டாப்பிற்கு பதிலாக இந்த லேப்டாப்பை வாங்கினால், ரூ.18,100 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறும்போது, ​​லேப்டாப்பின் விலை ரூ.291 ஆக ஆகிறது. 

இந்த லேப்டாப்பின் சிறப்பு என்ன?
Avita PURA APU Dual Core A6 Thin and Light Laptop பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாகவும் மிகவும் இலகுவாகவும் உள்ளது. இந்த லேப்டாப் 14 இன்ச் HD TFT IPS டிஸ்ப்ளே மற்றும் 1366 x 768 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. Windows 10 Home இல் வேலை செய்யும் இந்த லேப்டாப்பில், 4GB RAM மற்றும் 128GB SSD கிடைக்கும். உள்ளமைக்கப்பட்ட இரட்டை ஸ்பீக்கர்களுடன், இந்த லேப்டாப்பில் USB Type-C போர்ட் மற்றும் மினி HDMI போர்ட் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இந்த லேப்டாப் இரண்டு வருட ஆன்சைட் வாரண்டி மற்றும் இரண்டு வருட உள்நாட்டு வாரண்டியுடன் வருகிறது.

ALSO READ | இந்திய சந்தையை கலக்க வருகிறது MSI-ன் அட்டகாசமான Laptop: அசத்தல் அம்சங்கள்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News