பஜாஜ் டிரையம்ப் பைக் மீதான தள்ளுபடி ஆஃபர் நீட்டிப்பு... மிஸ் பண்ணாதீங்க

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறூவனமும், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ட்வின் லபைக் மாடல்கள் அறிமுகமான ஓராண்டிலேயே 50,000 பைக்குள் விற்பனையாகியுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2024, 01:19 PM IST
  • ஒரு வருட காலத்திற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்கள்
  • டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ள ட்ரையம்ப்.
  • தள்ளுபடி ஆஃபரை நீட்டிப்பதாக ட்ரையம்ப் அறிவிப்பு.
பஜாஜ் டிரையம்ப் பைக் மீதான தள்ளுபடி ஆஃபர் நீட்டிப்பு... மிஸ் பண்ணாதீங்க title=

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறூவனமும், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ட்வின் லபைக் மாடல்கள் அறிமுகமான ஓராண்டிலேயே 50,000 பைக்குள் விற்பனையாகியுள்ளன. சுமார் உலக அளவில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பைக் விற்பனையை மேலும், ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு சலுகை சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது. இரண்டு பைக்குகளுக்கும் ரூ. 10 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டது.

தள்ளுபடி ஆஃபரை நீட்டிப்பதாக ட்ரையம்ப் அறிவிப்பு

இந்நிலையில் இதற்கான சலுகை மேலும் நீட்டிக்கப்பட்டு, இந்தச் சலுகை 31 ஆகஸ்ட் 2024 வரை நீட்டிக்கப்படும் என ட்ரையம்ப் அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், புனவில் உள்ள சக்கன் பஜாஜ் வாகன உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது மற்றொரு சாதனையாகும். 

ஒரு வருட காலத்திற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்கள்

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு 2023 ஜூலை மாதத்தில், ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ட்ரையம்ப் நிறுவனம் பஜாஜ் ஆட்டோவுடன் இணைந்து ஸ்பீட் 400 பைக்கை அறிமுகப்படுத்தியது, இதன் ஆரம்ப விலை ரூ.2.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இதனுடன் ஸ்க்ராம்ப்ளர் 400X (Scrambler 400 X ) ஐ அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ. 2.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). 2024 ஜூலை மாதத்தில் தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ட்ரையம்ப் இந்தியா ரூ. 10,000 தலள்ளுபடியை அறிவித்த நிலையில், தள்ளுபடி ஆஃபர் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ள ட்ரையம்ப்

பிரிட்டிஷ் பிராண்ட் ஆன ட்ரையம்ப் அதன் டீலர் நெட்வொர்க்கை 100 ஷோரூம்களாக விரிவுபடுத்தியுள்ளது. 350சிசி முதல் 500சிசி வரையிலான உயர் செயல்திறன் கொண்ட பைக்குகளை தயாரிக்கும் பல நிறுவனங்கள், விற்பனையில் முதலிடத்தைப் பிடிக்க கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பஜாஜ் (Bajaj) தரவரிசையில் முன்னணியில் உள்ளது. இதனுடன் ட்ரையம்ப், கேடிஎம் (KTM) மற்றும் ஹஸ்க்வர்னா (Husqvarna) போன்ற பைக்குகள் களத்தில் உள்ளது.

மேலும் படிக்க | ஹைட்ரஜனால் இயங்கும் டாக்ஸியில் பறக்கத் தயாரா? சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பறக்கும் டாக்ஸி!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் முதலிடத்தில் உள்ளது. பல்சர் NS400Z விற்பனையில் ஹிமாலயன் 450 பைக்கை விட பின்தங்கியுள்ளது. பல்சர் NS400Zக்கு பின்னால் ட்ரையம்பின் 400 ட்வின் பைக் (ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400X) உள்ளது.

இப்போது ராயல் என்ஃபீல்டில் இருந்து ஒரு புதிய போட்டி பைக்கும் களத்தில் உள்ளது. இது ஹிமாலயன் 450 உடன் ஒப்பிடும்போது அபரிமிதமான விற்பனை திறனைக் கொண்டுள்ளது. இந்த பைக் கெரில்லா 450 ஆகும். இது சமீபத்தில் ரூ 2.39 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | எந்த நிறுவனத்தின் ஃபைபர் திட்டம் மிகவும் மலிவானது? ஏர்டெல் Vs ஜியோ! இல்லை பிஎஸ்என்எல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News