பணம் செலுத்தாமல் யூ டியூப்பில் விளம்பரங்களை தடுக்க சூப்பரான டிப்ஸ்

யூ டியூப் பிரீமியம் செலுத்தாமல் விளம்பரம் இல்லாமல் யூ டியூப்பில் வீடியோ பார்க்கலாம்.     

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 4, 2022, 03:57 PM IST
பணம் செலுத்தாமல் யூ டியூப்பில் விளம்பரங்களை தடுக்க சூப்பரான டிப்ஸ் title=

யூடியூப்பில் வீடியோக்களைப் பார்க்கும்போது விளம்பரங்கள் உங்களைத் தொந்தரவு செய்தால், அதில் இருந்து நீங்கள் தப்பிக்க சூப்பரான தந்திரம் உண்டு. இந்த தந்திரத்தை நீங்கள் சரியாக உபயோகித்தால் யூ டியூப் ப்ரீமியம் செலுத்தாமல் நீங்கள் யூடியூப்பில் விளம்பரம் இல்லாத வீடியோக்களை பார்க்க முடியும். YouTube உலகின் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். பாடல்கள் அல்லது திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் எதுவாக இருந்தாலும், உலகம் முழுவதிலும் உள்ள கன்டென்டுகளை ஒரே கிளிக்கில் YouTube-ல் பார்க்கலாம். ஞ

யூடியூப் யூசர்கள் பொதுவாக எந்த ஒரு வீடியோவைப் பார்க்கும்போதும் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். இது பலருக்கும் எரிச்சலாக உணர்கிறார்கள். இதனை தவிர்க்க நீங்கள் விரும்பினால் யூ டியூப் கொடுக்கும் யூடியூப் பிரீமியம் சந்தாவை வாங்க வேண்டும். இதன் மூலம் விளம்பரங்கள் இல்லாமல் YouTube வீடியோக்களை பார்க்கலாம். யூடியூப் பிரீமியம் வாங்காமல் விளம்பரங்கள் இல்லாமல் யூடியூப்பை இலவசமாகப் பார்க்கக்கூடிய ஒரு தந்திரத்தைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.

மேலும் படிக்க | Jio Recharge Plan: இரண்டு மாத வேலிடிட்டியில் புதிய பிளானை கொண்டுவந்திருக்கும் ஜியோ
    
விளம்பரங்கள் இல்லாமல் YouTube வீடியோக்களை இலவசமாகப் பார்க்கலாம் என்று நீங்கள் விரும்பினால், YouTube-ஐ உங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மூலம் பயன்படுத்தாமல் இணைய உலாவியில் பயன்படுத்த வேண்டும். 'Adblock for YouTube' என்ற Chrome நீட்டிப்பின் உதவியுடன், நீங்கள் YouTube விளம்பரங்களை இலவசமாகத் தடுக்க முடியும். இந்த நீட்டிப்பை Chrome மற்றும் Edge உலாவிகளில் பயன்படுத்தலாம்.

குரோம் நீட்டிப்பைத் தவிர, விளம்பரங்கள் இல்லாமல் YouTube-ல் வீடியோக்களைப் பார்க்க ஒரு வழி உள்ளது. அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 'இலவச Adblocker Browser: Adblock & Private Browser' என்ற மூன்றாம் தரப்பு செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த பயன்பாட்டின் மூலம், நீங்கள் YouTube வீடியோக்களில் இருந்து விளம்பரங்களை மிக எளிதாகத் தடுக்கலாம் மற்றும் விளம்பரமில்லா உள்ளடக்கத்தை அனுபவிக்கலாம்.

மேலும் படிக்க | Scooter Free: வாடிக்கையாளர்களுக்கு எலக்டிரிக் ஸ்கூட்டர் இலவசம்; அதிரடியாக அறிவித்த கம்பெனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News