வாட்ஸ்ப் வெப் இணைப்பதில் அடிக்கடி பிரச்சனையா? சரி செய்ய வழி இதோ

வாட்ஸ்அப் வெப்பை க்யூ ஆர் கோட் மூலம் இணைப்பதில் அடிக்கடி உங்களுக்கு பிரச்சனை இருந்தால், அதனை எப்படி சரி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 24, 2023, 04:32 PM IST
வாட்ஸ்ப் வெப் இணைப்பதில் அடிக்கடி பிரச்சனையா? சரி செய்ய வழி இதோ title=

உலகம் முழுவதும் விரைவாக சாட்டிங் செய்ய பயன்படுத்தப்படும் முதன்மையான செயலி WhatsApp. தனிப்பட்ட சாட்டிங் முதல் அலுவலக வேலைகளை விரைவாக செய்து முடிப்பதற்கு வரை வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ள செயலியாக இருந்து வருகிறது. மொபைல் மூலம் மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் செயலியை க்யூஆர் கோட் (Whats App QR Code) மூலம் இணையத்தில் நேரடியாக கனெக்ட் செய்தும் சாட்டிங் செய்யலாம். கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்புகளில் வேலை செய்பவர்கள் அடிக்கடி மொபைல் எடுத்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்போது வாட்ஸ்அப் வெப் இணைப்பு மூலம் வாட்ஸ்அப் சாட்டிங்கை எளிதாக மேற்கொள்ள முடியும்.

ஆனால் இதில் பலரும் சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் வெப் கணெக்ஷன் பலருக்கும் பிரச்சனையாக இருக்கிறது. வாட்ஸ்அப் வெப்பில் கனெக்ட் செய்த உடனே திடீரென லாக் அவுட்டாகிவிடுகிறது. சில நிமிடங்கள் அல்லது சில மணிநேரங்களில் வாட்ஸ்அப் வெப் இப்படி லாக் அவுட் ஆவதால், பரபரப்பான சூழலில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் ஒரு வித தலைவலியைகூட இந்தப் பிரச்சனை உண்டாக்கிவிடுகிறது. இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை உங்களுக்கும் இந்தப் பிரச்சனை இருந்தால், எப்படி சரி செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் BSNL-இன் இந்த திட்டம்... முழு விவரம்!

வாட்ஸ்அப் QR ஸ்கேனர்

வாட்ஸ்அப் க்யூ ஆர் ஸ்கேனர் சரியாக வேலை செய்ய வேண்டும் என்றால் உங்களின் இண்டர்நெட் இணைப்பு சரியாக இருக்க வேண்டும். இண்டர்நெட் சரியாக இல்லை என்றால் வாட்ஸ்அப் க்யூஆர் இணைப்பு வேலை செய்யாது. அதேபோல், வாட்ஸ்அப் இணைய QR குறியீடு உள்ளமைக்கப்பட்ட QR குறியீடு ஸ்கேனருடன் மட்டுமே செயல்படும். 

கேமரா லென்ஸ் சுத்தம்

உள்ளமைக்கப்பட்ட QR குறியீடு ஸ்கேனரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்த பிறகு, செய்ய வேண்டிய இரண்டாவது அடிப்படை விஷயம், உங்கள் தொலைபேசியின் கேமரா லென்ஸ் சுத்தமாக இருக்க வேண்டும்.

செயலி தற்காலிக சேமிப்பு 

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் கூகுள் உள்ளிட்ட தேடுபொறியில் நிறைய தற்காலிக சேமிப்புகள் அதிகம் இருந்தால், அதனுடைய செயல்பாடு கடுமையாக பாதிக்கும். உங்களுக்கு விருப்பமான இணைய உலாவியின் தற்காலிக சேமிப்பை நீக்கிவிடுங்கள். 

டார்க் மோட் நீக்கம்: இன்னும் உங்களால் வாட்ஸ்அப் இணையத்தை அணுக முடியவில்லை என்றால், அடுத்ததாக உங்கள் டெஸ்க்டாப்பில் டார்க் மோடை முடக்க முயற்சிக்க வேண்டும்.

சாதனங்கள் நீக்கம்: WhatsApp பயனர்கள் ஒரு கணக்கிலிருந்து 4 சாதனங்களை இணைக்க முடியும். எனவே உங்களது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி WhatsApp Web QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியாவிட்டால், அரிதாகப் பயன்படுத்தப்படும் இணைக்கப்பட்ட சாதனத்தை அகற்றுவது நல்லது.

மேலும் படிக்க | விடிய விடிய ஏசி ஓடினாலும் கரண்ட் பில் வராது..! இதோ டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News