Xiaomi 11 Lite NE 5G அட்டகாசமாய் அறிமுகம் ஆனது: விலை, அம்சங்கள் இதோ

உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்ட் சியோமி தனது புதிய ஸ்மார்ட்போன் Xiaomi 11 Lite NE 5G-ஐ இன்று மதியம் 12 மணிக்கு நேரடி மெய்நிகர் நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2021, 12:42 PM IST
  • சியோமி தனது புதிய ஸ்மார்ட்போன் Xiaomi 11 Lite NE 5G-ஐ இன்று மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்தது.
  • இந்த போனில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.55 அங்குல முழு HD+ 20:9 AMOLED ஸ்க்ரீன் உள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778G 6nm பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
Xiaomi 11 Lite NE 5G அட்டகாசமாய் அறிமுகம் ஆனது: விலை, அம்சங்கள் இதோ   title=

Xiaomi 11 Lite NE 5G launch: மொபைல் ஆர்வலர்கள் ஆவலாக காத்திருந்த தருணம் வந்துவிட்டது. உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்ட் சியோமி தனது புதிய ஸ்மார்ட்போன் Xiaomi 11 Lite NE 5G-ஐ இன்று மதியம் 12 மணிக்கு நேரடி மெய்நிகர் நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சி நிறுவனத்தின் யூடியூப் சேனலில் பகல் 12 மணி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Xiaomi 11 Lite NE 5G, 6.55-inch Full HD+ 20: 9 AMOLED டிஸ்ப்ளேவுடன் 90Hz ரெஃப்ரெஷ் வீதத்துடன் வருகிறது. மேலும், இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778 ஜி 6 என்எம் செயலி மூலம் ஆண்ட்ராய்டு 11 உடன் MIUI 12.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயக்கப்படுகிறது.

கேமராவைப் பற்றி பேசுகையில், இது f/1.79 துளை கொண்ட 64MP பின்புற கேமரா, LED ஃப்ளாஷ், f/2.2 துளை கொண்ட 8MP 119 ° அல்ட்ரா-வைட் சென்சார், கான்ட்ராஸ்ட் AF (3cm-7cm), f/2.4 துளை கொண்ட 5MP டெலிமேக்ரோ கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. . கூடுதலாக, இது f/2.4 துளை கொண்ட 20MP முன் கேமராவையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும், இந்த போன் (Mobile Phone) சைட்-மவுண்டட் கைரேகை சென்சார், ஐஆர் சென்சார் மற்றும் ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி) ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், இது USB Type-C ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை ஆதரிக்கிறது. மேலும் இந்த போன், 250mAh (வழக்கமான) பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.

Xiaomi 11 Lite NE 5G: விவரக்குறிப்புகள்

டிஸ்பிளே:

இந்த போனில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.55 அங்குல முழு HD+ 20: 9 AMOLED ஸ்க்ரீன் உள்ளது. கூடுதலாக, இது நார்மல் 500nits (டைப்) / 800nits வரை (உயர் பிரகாசம் பயன்முறை), டால்பி விஷன், HDR10+, sRGB 100% (வகை) ஆதரவு, DCI-P3 வண்ண வரம்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 1080 × 2400 பிக்சல்கள் ரெசல்யூஷன் ரேட் அகியவை உள்ளன. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 160.53 x 75.73 x 6.81 மிமீ என்ற அளவுகளையும் 158 கிராம் எடையையும் கொண்டுள்ளது .

ALSO READ: சாம்சங் கேலக்ஸி M32 5G அறிமுகம்: முழு விவரம் இங்கே

பிராசசர்:
இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) ஆக்டா கோர் (4 x 2.4GHz + 4 x 1.8GHz கிரியோ 670 CPU கள்) ஸ்னாப்டிராகன் 778G 6nm பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இதில் Adreno 642L GPU உள்ளது. இது கேம்களை விளையாடும்போது மென்மையான மற்றும் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

மெமரி:
இந்த சியோமி ஸ்மார்ட்போனில், 128GB (UFS 2.2) ஸ்டோரேஜுடன் கூடிய 6GB / 8GB LPDDR4X RAM / 256GB (UFS 2.2) ஸ்டோரேஜுடன் கூடிய 8GB LPDDR4X RAM, 1TB வரையிலான விரிவாக்கக்கூடிய மெமரி ஆகியவை உள்ளன. மேலும், இது சைட்-மவுண்டட் கைரேகை சென்சார், ஐஆர் சென்சார், யூஎஸ்பி டைப்-சி ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

விலை:
Xiaomi 11 Lite NE 5G (6GB + 128GB)-யின் விலை ரூ. 23,499-லும் (8GB + 128GB) 25,499 ரூபாயிலும் துவங்குகிறது. 

ALSO READ: Amazon அதிரடி: ரூ. 26,000 Oppo 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 13,000-க்கு வாங்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News