iPhone 12 இல் மிகப்பெரிய தள்ளுபடி, குறைந்த விலையில் வாங்கலாம்

Flipkart Big Billion Days விற்பனையில், iPhone 12 மிகவும் மலிவான விலையில் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2021, 01:11 PM IST
iPhone 12 இல் மிகப்பெரிய தள்ளுபடி, குறைந்த விலையில் வாங்கலாம் title=

புதுடெல்லி: Flipkart தனது 2021 Big Billion Days sale வரும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போல, இந்த ஆண்டும் ஐபோன் இல் சிறந்த தள்ளுபடிகள் வெளியிடப்பட உள்ளது.

Flipkart விற்பனையில் ஐபோனில் பெரும் தள்ளுபடி உள்ளது. இந்த ஆண்டும் ஐபோன்களில் (iPhone 12) அற்புதமான சலுகைகள் வரும். அதன்படி ஃபிளிப்கார்ட் ட்விட்டரில் ஐபோன் 12 விற்பனை விலையை காட்டும் வீடியோவை பகிர்ந்துள்ளது.

ALSO READ: விலை குறையும் ஐபோன்கள்! ஆர்வத்தில் மக்கள்!

iPhone 12 இல் மிகப்பெரிய Discount
iPhone 12 இந்தியாவில் ரூ .65,900 க்கு விற்கப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் விற்பனையில், இது ரூ .49,999 க்கு விற்கப்படும். அதாவது, 15,901 வரை தள்ளுபடி கிடைக்கும்.

iPhone 12 இன் விவரக்குறிப்புகள்
ஐபோன் 12 25.13 x 1170 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்கிரீன் 625 நிட்ஸ் பிரகாசம், HDR ஆதரவு மற்றும் 460 ppi பிக்சல் கொண்டது. தொலைபேசி Apple A14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 12+12MP இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது.

சீனாவில் விலை குறைக்கப்பட்டது
சீன சந்தையில் ஐபோன் 12 விலை குறைந்துள்ளது. தொலைபேசியில் $ 310 (ரூ. 22,863) குறைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி முன்பு சீனாவில் $ 1,054 க்கு (ரூ. 77,736) விற்கப்பட்டது. ஆனால் விலை குறைப்புக்குப் பிறகு, இது $ 744 (ரூ. 54,872) க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ: ரூ. 33000 க்கு அசத்தலான சாம்சங் 5 G ஸ்மார்ட் போன் !

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News