இந்திய சந்தையில் சிறந்த விற்பனை ஸ்கூட்டர்களின் மாடல்களின் ஒன்று யமஹா ஃபசினோ. இந்த யமஹா ஃபசினோ ஸ்கூட்டர் தற்போது ஸ்டைலிசான தோற்ற அமைப்பினை பெற்றதாக விளங்கும் எஞ்சின் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லாமல் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த யமஹா ஃபசினோ ஸ்கூட்டர் புதிய கிளாமரஸ் கோல்டு நிறம் வெளிவந்துள்ளது. இந்த புதிய கிளாமரஸ் கோல்டு நிறம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெரும் என்று யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
மைலேஜ் திறனை வெளிப்படுத்தும் 113cc, Blue Core carbureted motor பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த motor 7.1 PS ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் இழுவைத் திறன் 8.1 Nm ஆகும். யமஹா ஃபசினோ ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 66 kmpl ஆகும்.
2018 யமஹா ஃபசினோ ஸ்கூட்டர் (Glamorous Gold, Dapper Blue, Beaming Blue, Dazzling Grey, Sizzling Cyan, Spotlight White and Sassy Cyan) ஆகிய 7 நிறங்களில் உள்ளது. மேலும் முந்தைய ஃப்யூசன் சிவப்பு நிறம் நீக்கப்பட்டுள்ளது.