5G Phone: ஒரு நாளைக்கு 44 ரூபாய் செலுத்தி Samsung 5G Smartphone வாங்கலாம்

5G Smartphones At Just Rs 44: சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 5ஜி ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி ஏ14 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ23 5ஜி போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2023, 01:58 PM IST
  • ஒரு நாளைக்கு வெறும் ரூ.44 செலுத்தி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
  • மாதம் ரூ.1,320 செலுத்தி சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
  • ஸ்மார்ட்போனின் விலை 15,999 முதல் 20,999 வரை இருக்கலாம் எனத் தகவல்.
5G Phone: ஒரு நாளைக்கு 44 ரூபாய் செலுத்தி Samsung 5G Smartphone வாங்கலாம் title=

Samsung 5G Mobile: இந்தியாவில் 5ஜி சேவை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருவதால், 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போது பெரும்பாலனோர் 3ஜி, 4ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் 5ஜி சேவையை அனுபவிக்க முடியாத நிலை இருப்பதால், நல்ல தரமான மலிவு விலையில் கிடைக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சலுகை விலையில் தவணை முறையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகின்றனர். நீங்கள் முழுபணத்தையும் செலுத்தி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியாத சூழலில் இருக்கும்பட்சத்தில், நீங்கள் தினமும் அதாவது ஒரு நாளைக்கு வெறும் ரூ.44 அல்லது மாதம் ரூ.1,320 செலுத்தி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம். கவர்ச்சிகரமான ஈஎம்ஐ (EMI) விருப்பங்கள் மூலம் இதை அனுபவிக்க முடியும்.

இந்தியாவில் தற்போது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 62 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதாக சாம்சங் இந்தியா செவ்வாய்கிழமை (ஜனவரி 24) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: அமேசானில் கொடிகட்டி பறக்கும் ஒன்பிளஸ் மொபைலின் விற்பனை..!! விலை

சாம்சங் இந்தியாவின் மொபைல் வர்த்தகத்தின் மூத்த இயக்குனர் ஆதித்யா பப்பர், ஐஏஎன்எஸ் ஊடகத்திடம், "புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களின் ஆரம்ப வெளியீடு என்பது நிறுவனத்தின் 5ஜியின் முதல் உத்தியின் ஒரு பகுதியாகும் என்றார்.  மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஏ14 5ஜிக்கு ஒரு நாளைக்கு ரூ.44 மற்றும் குறைந்த ஈஎம்ஐ உட்பட, வாடிக்கையாளர்களுக்கு பல மலிவு விலையில் கொண்டு வந்துள்ளோம். கடந்த ஆண்டு, கேலக்ஸி ஏ சீரிஸ் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருந்தது என்றும் பாபர் கூறினார்.

கேலக்ஸி ஏ14 5ஜி - கேலக்ஸி ஏ23 5ஜி விலை

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ14 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ23 5ஜி ஆகிய புதிய 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இந்த போனை எளிய தவணையில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது இந்த ஸ்மார்ட்போனின் விலை 15,999 முதல் 20,999 வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த போனை தவணை முறையில் வாங்க மாதம் 1,320 ரூபாய் அதாவது தினசரி 44 ரூபாய் இருந்தால் வாங்கலாம். 

5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

பெரிய 6.6-இன்ச் திரை மற்றும் தடையற்ற பொழுதுபோக்குக்காக 5000mAh பேட்டரியுடன் வருகின்றன. சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களான கேலக்ஸி ஏ14 5ஜி மற்றும் ஏ23 5ஜி ஆகியவற்றில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும்.

Galaxy A14 5G மாடலில் புதிய Galaxy சிக்னேச்சர் வடிவமைப்பு உள்ளது. மேலும் இது இந்தியாவில் A தொடர் போர்ட்ஃபோலியோவில் நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது ரூ.14,999 முதல் தொடங்கும். OIS உடன் 50MP கேமராவுடன் வரும் Galaxy A23 5G, பயனுள்ள விலை ரூ.20,999 இல் தொடங்குகிறது.

மேலும் படிக்க: BSNL சூப்பர் திட்டம்! செட்-டாப் பாக்ஸ் இல்லாமல் 1000 சேனல்களை இலவசமாக பார்க்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News