யூ டியூப் இனி இந்த மோசடிகளை செய்ய முடியாது!

யூடியூப் ஷார்ட்ஸில் உள்ள இணைப்புகள் மூலம் அரங்கேறும் மோசடிகளை தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை கூகுளுக்கு சொந்தமான யூடியூப் எடுத்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 11, 2023, 05:48 PM IST
  • யூ டியூப்பில் புதிய மோசடி
  • தடுக்க வந்த புதிய நடைமுறை
  • இனி லிங்குகள் ஓபன் ஆகாது
யூ டியூப் இனி இந்த மோசடிகளை செய்ய முடியாது! title=

யூ டியூப்பை பயன்படுத்தி ஸ்பேம் மற்றும் மோசடிகள் அதிகரித்து வருகிறது. யூடியூப் வீடியோக்களுக்கு கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடப்படும் லிங்குகளில் தான் இந்த வகையான மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. யார் வேண்டுமானாலும், எந்த யூ டியூப் வீடியோக்களுக்கும் கீழ் சென்று எந்த மாதிரியான லிங்குகளையும் பதிவிட முடியும். அப்படி பதிவிடப்படும் மோசடி லிங்குகளை யூசர்கள் கிளிக் செய்யும்போது மோசடி வலைக்குள் சிக்குகின்றன. அதுமட்டுமில்லாமல் கிளிக் மூலம் கிடைக்கும் பார்வைகள் உள்ளிட்டவை வழியாகவும் மோசடிகள் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | HackerGPT: AI மூலம் அருகில் இருப்பவரின் பாஸ்வேர்டு, வங்கி கணக்கு விவரங்களை திருடலாம்

இதனை தடுக்க வேண்டும் என உலகம் முழுவதும் இருக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதனடிப்படையில் ஸ்பேம் மற்றும் மோசடிகளை எதிர்கொள்ள, Google க்கு சொந்தமான YouTube, ஆகஸ்ட் 31, 2023 முதல் Shorts கருத்துகள் மற்றும் விளக்கங்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்ய முடியாதபடி செய்துள்ளது. யார் எந்த லிங்குகளை பதிவிட்டாலும், யூசர்கள் அதனை கிளிக் செய்தால் அந்த பக்கம் ஓபன் ஆகாது.  இது குறித்து விளக்கம் அளித்துள்ள யூடியூப் நிறுவனம், "ஆகஸ்ட் 31, 2023 முதல், ஷார்ட்ஸ் கருத்துகள், ஷார்ட்ஸ் விளக்கங்கள் மற்றும் இணைப்புகளில் உள்ள இணைப்புகள் நேரடியாக இனி கிளிக் செய்ய முடியாது" என்று வியாழக்கிழமை அறிவித்தது. 

"மோசடி உத்திகள் அதிகமாக உருவாகி வருவதால், மோசடி செய்பவர்கள் மற்றும் ஸ்பேமர்கள் இணைப்புகள் மூலம் பயனர்களை தவறாக வழிநடத்துவது அல்லது மோசடி செய்வதை கடினமாக்குவதற்கு நாங்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." அனைத்து டெஸ்க்டாப் சேனல் பேனர்களிலிருந்தும் கிளிக் செய்யக்கூடிய சமூக ஊடக ஐகான்கள் இனி காண்பிக்கப்படாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. கிரியேட்டர்கள் தகவல்களைப் பகிரவும் தயாரிப்புகள்/பிராண்டுகளை தங்கள் சமூகங்களுக்குப் பரிந்துரைக்கவும் இணைப்புகள் முக்கியமான வழியாக இருப்பதால், முக்கியமான இணைப்புகளைக் காட்சிப்படுத்த புதிய வழிகளை YouTube அறிவித்தது.

"ஆகஸ்ட் 23, 2023 முதல், மொபைலிலும் டெஸ்க்டாப்பிலும் உள்ள பார்வையாளர்கள், கிரியேட்டர்களின் சேனல் சுயவிவரங்களில் 'join Group' பட்டனுக்கு அருகில் கிளிக் செய்யக்கூடிய முக்கிய இணைப்புகளைப் பார்க்கத் தொடங்குவார்கள்." அடுத்த மாத இறுதிக்குள், ஷார்ட்ஸ்களிலிருந்து பார்வையாளர்களை அவர்களின் மற்ற YouTube உள்ளடக்கத்திற்கு வழிநடத்தும் பாதுகாப்பான வழியை உருவாக்கத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Samsung, LG, Xiaomi: அமெசானில் அதிரடி.. ரூ. 15,000-க்கும் குறைவான விலையில் பிராண்டட் ஸ்மார்ட் டிவி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News