ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்பதில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இது குறித்து நேற்று தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கூட்டத்தில் வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் உரையாற்றிய சந்திரபாபு நாயுடு உரையாடினர்.
சந்திரபாபு நாயுடு கோட்டத்தில் பேசியதாவது....!
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உட்பட ஆந்திர அரசின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாமல் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. எங்களின் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அப்பாடி செய்தும் மத்திய அரசு இன்னும் பிடிவாதமகா இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.
இதையடுத்து, லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு தொடர்ந்து ஒளிந்து ஓடுவது ஏன்? இது அரசியல் தற்கொலைக்கு சமம் என அவர் தெரிவித்தார்.