மே 18!! நாம் நாதியற்றவர்கள் அல்ல வாருங்கள் காட்டுவோம் -வைகோ அழைப்பு

ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை பற்றி பேசிய வைகோவின் காணோளியை பகிர்ந்துள்ளார் திருமுருகன் காந்தி.

Written by - Shiva Murugesan | Last Updated : May 18, 2018, 03:01 PM IST
மே 18!! நாம் நாதியற்றவர்கள் அல்ல வாருங்கள் காட்டுவோம் -வைகோ அழைப்பு title=

இலங்கைத் தமிழர் மற்றும் உலகத் தமிழரால் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் ஈழப்போரில் இறந்தவர்களை நினைவு கூரும் நாளாக நினைவு கூறப்படுகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டில் மே 18 ஆம் தேதி அன்று இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலில் லட்சகணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். அன்றே ஈழப்போர் முடிவுற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த தினத்தை (May 18 ) ஆண்டு தோறும் உலக தமிழர்கள் இனப்படுகொலை நினைவு நாளாக கடைபிடித்து வருகின்றனர்.

இதனால் இன்று உலக முழுவதும் மே 18 நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தினம் குறித்து தனது முகநூலில் பக்கத்தில் திருமுருகன் காந்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை பற்றி பேசிய காணோளியை பகிர்ந்துள்ளார். அதில், 

"நாங்கள் அமைதியாக வருவோம். எங்கள் தாயகத்தில், எங்கள் கடற்கரையில், எங்கள் மணலில் நாங்கள் அமர்ந்து கண்ணீர் சிந்துவோம். நாங்கள் வீரவணக்கம் செலுத்துவதை நீங்கள் தடுக்க முடியாது.

முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தங்கள் மேனியை தணலுக்குத் தந்து, நெருப்பின் நாவுகளுக்கு தங்களுடைய ஆவியை காணிக்கையாக்கி மடிந்தார்களே, அவர்களை ஒரு கணம் நெஞ்சில் நிறுத்துங்கள். நாம் நாதியற்றவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்கு வாருங்கள்." 

காணொளி:-

Trending News