குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அனால் தற்போது வரை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எந்த நேரத்திலும் தேர்தலுக்காக தேதி அறிவிக்கப்படும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டு பவ்நகர் மற்றும் வதோதரா பகுதியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமிற்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
அப்துல்கலா-மை நினைவு படுத்தி வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்துல்கலாம் அவரது ஆளூமை மூலம் லட்ச கணக்கான மக்களை ஈர்த்தவர் என்றும் புகழ்ந்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திபிற்க்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் தொடர்பாக எதுவும் நான் பிரமதரிடம் பேசவில்லை. தமிழக மின் உற்பத்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். மேலும் கூறுகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி பணிகள் தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளளேன்.
இவ்வாறு பேட்டி அளித்தார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இன்றிரவு டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், பிரதமர் மோடியை சந்திக்க இயலவில்லை. இந்நிலையில் நாளை ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் இன்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் செல்கின்றனர்.
பாலிவுட் நடிகர் நஅமிதாப் பச்சன் இன்று 75வது பிறந்தநாள். அதை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
சினிமா துறையில் அமிதாப் போன்ற திறமையான ஒருவரை பெற்றதில் இந்தியா பெருமை கொள்கிறது. பொது நலன்கள் பலவற்றில் ஆதரவு அளித்து வரும் அமிதாப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக 52 வயதான நடிகர் பிரகாஷ்ராஜ் மீது உ.பி., மாநில லக்னோ நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு.
பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்தவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை. தொடர்ந்து பிரதமர் மோடி மவுனமாகவே இருக்கிறார் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
Prime Minister Narendra Modi pays tributes to #MahatmaGandhi at Delhi's Rajghat #GandhiJayanti pic.twitter.com/YW7FvjBslE
நாடு முழுவதும் நகரம், கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ‘சௌபாக்யா ’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
ரூ.16,320 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் 2018, டிசம்பருக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்து தர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ‘பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா சௌபாக்யா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் பேசியது:-
இன்று பிரதமர் மோடி தனது 67_வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பாஜக-வினர் தூய்மை இந்தியா திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள தனது தாயார் ஹிராபாயை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்தார். இந்த ஆணை ரூ.16,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. உலகின் 2_வது மிகப்பெரிய அணையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பிரதமர் மோடி தனது 67_வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்துக் கூறியுளனர்.
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பாஜக-வினர் தூய்மை இந்தியா திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள தனது தாயார் ஹிராபாயை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்தார். இந்த ஆணை ரூ.16,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. உலகின் 2_வது மிகப்பெரிய அணையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று பாஜக சார்பில் நடைபெறும் இரண்டு பேரணியில் கலந்துக் கொள்கிறார்.
டெல்லியில் இன்று சுவாமி விவேகானந்தர் சிகாகோ இந்து சமய மாநாட்டில் உரை நிகழ்த்தியதன் 125 வது ஆண்டு தினம் மற்றும் பாஜக தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு மாணவர் மாநாடு நடந்தது.
"யங் இந்தியா, நியூ இந்தியா" என்பதை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
9/11 என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல், ஆனால் 9/11 எனும்போது நம் நினைவுக்கு வருவது 1893 ஆண்டு அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை கூறிய விவேகானந்தரின் பேச்சு.
உ.பி., மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவத்தை ஓவியமாக வரைந்த முஸ்லிம் பெண்ணை அவரது கணவர் உட்பட 6 பேர் தாக்கி உள்ள சம்பவம் அதிரிச்சியில் உள்ளக்கி உள்ளதுனர். அந்த பெண்ணை தாக்கியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உ.பி., மாநிலம் பாலியா மாவட்டம் சிக்கந்தர்பூரை அடுத்துள்ள பசாரிக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பர்வேஸ் கான். கடந்த ஆண்டு இவருக்கும் நக்மா பிரவீன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. நக்மாவுக்கு ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம் உள்ளது.
சீனா பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சீனா சென்றார். அங்கு பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்தித்தார்.
பின்னர் தனது சீன பயணத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று முன் தினம், மியான்மர் புறப்பட்டு சென்றார். தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை நேற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் இருந்து மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் மியான்மர் நாட்டுக்கு சென்றார்.
தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை நேற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், மியான்மரில் உள்ள யாங்கூன் பகுதியில் ஷ்வேடகான் பகோடாவிற்கு இன்று பிரதமர் மோடி சென்றார். மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசிரியர் தின வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று டிவிட் செய்து தெரிவித்துள்ளார்.
மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 5-ம்) இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வி மேதையாவார். ஆகையால் இவரது நினைவை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளதார். அதில்:-
அமைச்சர்கள் ஆடம்பரத்தை தவிருங்கள் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 5 ஸ்டார் விடுதிகளில் தங்குவதைத் தவிர்க்குமாறும், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அமைச்சகங்களின் உபயோகத்திற்கு உள்ள கார்களைப் பயன்படுத்துவது போன்ற சலுகைகளைத் தவிர்க்குமாறும் பாஜக அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 16-ம் தேதி அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர்களை டெல்லியிலேயே தங்கும்படி மோடி கூறி இருந்தார். பின்னர் அவர்களை சந்தித்து சில அமைச்சர்களின் ஆடம்பரம் குறித்து கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி
ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதன்படி இன்று இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து:-
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:-
சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சென்னையில் இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்வர் எடப்பாடியார் பார்வையிட்ட அணிவகுப்பில் ஆந்திரா காவல்துறையினர் முதல் முறையாக பங்கேற்றனர்.
இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்றினார்.
இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சென்னையில் இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். முன்னதாக ராஜாஜி சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.