தனது பிறந்த நாளில் சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்த பிரதமர் மோடி

Last Updated : Sep 17, 2017, 11:57 AM IST
தனது பிறந்த நாளில் சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்த பிரதமர் மோடி  title=

இன்று பிரதமர் மோடி தனது 67_வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர். 

பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பாஜக-வினர் தூய்மை இந்தியா திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள தனது தாயார் ஹிராபாயை சந்தித்து ஆசி பெற்றார். 

பின்னர் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்தார். இந்த ஆணை ரூ.16,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. உலகின் 2_வது மிகப்பெரிய அணையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மேலும் இன்று பாஜக சார்பில் நடைபெறும் இரண்டு பேரணியில் கலந்துக் கொள்கிறார்.

 

 

Trending News