சம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய அணி முதலில் 'பேட்டிங்' துவக்கியள்ளது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஜூன் 1-ம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி 2017 தொடர் தொடங்கியது. இன்று நடக்கும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மோதுகின்றது.
இலங்கை அணியில் முழங்கால் காயம் காரணமாக சமரா கபுகேதரா விலகினார். காயத்தில் இருந்து மீண்ட ரெகுலர் கேப்டன் மாத்யூஸ் அணிக்கு திரும்பினார். உபுல் தரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் திசாரா பெரேரா வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே பிரச்சனை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விராட் கோலி அந்த கருத்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்படுகிறது.
ஐசிசி ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர்களே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முதல் இடம் வகிக்கின்றனர்.
சிறந்த பேட்டிங் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ் 874 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
அதே போல பந்துவீச்சாளர்களில் காகிஸோ ரபாடா 724 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய அணி சார்பில் விராட் கோலி 3-ம் இடத்தில் உள்ளார்.
பந்து வீச்சாளர்களில் ஒரு இந்திய வீரர் கூட டாப் 10ல் இடம் பெறவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் ஜூன் 1-ம் தேதி துடங்கி 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இப்போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.
முன்னதாக இப்போட்டி குறித்து விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது:-
வலுவான அணிகள் இருந்தால் மட்டுமே போட்டி அதிகமாக இருக்கும். தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணிக்கு வலுவான இரு துண்கள் போன்றவர்கள்.
ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு விராட் கோலி தலைவராக உள்ளார். தற்போது நடைபெற்று வரும்
ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் பெரும்பாலான வீரர்கள் தாடியுடன் தான் வலம் வருகிறார். இந்த நிலையில் கோடைகாலத்தை யொட்டி ரோகித் சர்மா ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தாடியை மழித்து ஸ்டைலை மாற்றியுள்ளனர்.
தாடியை குறித்து ஜடேஜா தனது டுவிட்டரில் கூறியது, ‘களத்தில் ஆட்டத்தை மாற்றுவோம். வீரர்களின் ஓய்வறையில் நமது தோற்றத்தை மாற்றுவோம். தாடிக்கு ஓய்வு கொடுப்போம்’ என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தோள்பட்டையில் காயம் அடைந்தார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் தற்போது வரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில், விராட் கோலி காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததால், பெங்களூருவில் நாளை (ஏப்ரல் 14-ம் தேதி) நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
4-வது நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடந்தது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட் அணிகள் மோதின.
20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு புனே அணி 163 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 164 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடிய பஞ்சாப் அணி 19 ஓவரில் 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
4-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட் அணிகள் மோதின.
இந்திய பிரபலங்களில் விளம்பரங்களில் நடிக்க அதிகச் சம்பளம் வாங்குபவர்களில் கிரிக்கெட் வீரர் விராத் கோலி என்றால் நம்ப முடிகின்றதா? சென்ற ஆண்டு வரை முதல் இடத்தில் இருந்து வந்த தோனியை பின்னுக்குத்தள்ளி கோலி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கோலி ஒரு நாளைக்கு 2.5 கோடி, 4 கோடி எனச் சம்பளம் பெற்றுவந்துள்ளார். இப்போது கோல நிறுவனமான பெப்ஸிகோ நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க இவருக்கு ஒரு நாளைக்கு 5 கோடிகள் வரை அளிக்கத் தயாராக இருக்கின்றனர்.
10-வது ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணி ஆடும் முதல் போட்டியில் ஆடுவது சந்தேகமாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிகளில் அடைந்த காயம் முழுமையாகக் குணமடையாத நிலையில், இன்னும் ஓய்வு தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து ஒரே ஒரு போட்டியைத்தான் கோலி மிஸ் செய்து இருந்தார்.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
முதல் டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி. இரண்டாவது டெஸ்ட் இந்தியா வெற்றி. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. நான்காவது டெஸ்ட் இந்தியா வெற்றி.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் புனேயில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும்,
பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்ற இந்தியா லோகேஷ் ராகுல்(51), ராகனே(38) ரன்கள் எடுத்தனர்
2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.
Game. Set. Match...#TeamIndia win the Decider Test by 8 wickets. Claim the 4-match series 2-1 #INDvAUS pic.twitter.com/UkpNLqNShH
தர்மசாலாவில் நடைபெற்று வரும் 4_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 118.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 332 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலை பெற்றது.
தர்மசாலாவில் நடைபெற்று வரும் 4_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 111 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
தர்மசாலாவில் நடைபெற்று வரும் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்துள்ளது.
வார்னர் 56 ரன்களும், கேப்டன் ஸ்மித் 111 ரன்களும், மேத்தீவ் வாட் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ்வ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ரென்ஷா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர் ஜோடி சிறப்பாக விளையாடியது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு புதுமுக வீரரான சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா திணறியது. ஆனாலும் கேப்டன் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 111 ரன்னில் அவுட் ஆனார். விக்கெட் கீப்பர் வடே அரைசதம் கடக்க அந்த அணி 300 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் புனேயில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் புனேயில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்குகியது
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் புனேயில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.