தைவான் தலைநகர் தைபேயில் முதல் இந்து கோவில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக தைபேயில் வசிக்கும் இந்து வணிகர் ஒருவரால் இந்த ஆலயம் திறக்கப்பட்டுள்ளது.
Australia Temple Attack: விஷ்ணு கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான சொற்றொடர்கள் இருந்த நிலையில், சுவாமிநாராயண் கோயிலிலும் ‘சமூக விரோத சக்திகளால்’ இது போன்ற பல செய்திகள் எழுதப்பட்டன, கோவிலின் பல பாகங்கள் சிதைக்கப்பட்டன.
Maha Shivratri 2023 Threat: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயிலுக்கு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன; காலிஸ்தானிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்புமாறு மிரட்டல் விடப்பட்டுள்ளது
கனடாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், கௌரி சங்கர் கோயிலில் நடந்த நாசவேலைக்கு கண்டனம் தெரிவிக்கையில், இந்தச் செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது என கூறியுள்ளது.
துபாயின் ஜெபல் அலியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவில் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் 2020 பிப்ரவரியில் நாட்டப்பட்டது. தசரா பண்டிகையையொட்டி இன்று கோயில் திறக்கப்பட்டது. இந்த பகுதியில் வழிபாட்டுத்தலம் வேண்டும் என்ற இந்தியர்களின் பல தசாப்த கால கனவை இது நிறைவேற்றியுள்ளது.
Chennai Highcourt : கோவில் நிலங்களை முழுமையாக மீட்பதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது
பாகிஸ்தானில் கோவில்கள் மீதான தாக்குதல்கள் குறித்த செய்தி தினமும் வெளியாகும் நிலையில், ஆகஸ்ட் 4 அன்று போங் ஷெரீப் கிராமத்தில், விநாயகர் கோவிலை மர்ம நபர்கள் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவியது.
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோயில் மீது தாக்குதல் நடத்திய செய்தி மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆலய இடிப்பு வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசாருக்கு கிடைத்த புகாரின்படி, சனிக்கிழமை மாலை, புராண கிலா பகுதியில் உள்ள ஆலயத்தின் படிக்கட்டுகளையும் கதவுகளையும் 10-15 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி உடைத்தது
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்டபோது, மவுனமாக கை கட்டி வேடிக்கை பார்த்த பாகிஸ்தானிற்கு, ஆன்மீக தலங்களை பாதுகாக்கும் ஐநா தீர்மானத்தில் பங்கேற்க அருகதை இல்லை என இந்தியா கூறியுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில், அடிப்படைவாத கும்பல் ஒரு இந்து கோவிலை உடைத்து தீ வைத்தது. உலகின் பல மூலைகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. ஆனால் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் இந்த சம்பவத்தை ஆதரித்துள்ளார்.
பாகிஸ்தானில் இந்து மத கோயில்கள் தாக்கப்படுவது இது முதன் முறையல்ல. சிந்தில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.