H. Raja News : தமிழ்நாடு பாஜகவின் முக்கிய தலைவரான எச் ராஜா திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையத்துக்கு சென்றார். அங்கு நடைபெற்ற பாஜகவின் மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய எச் ராஜா, தமிழ்நாட்டில் கொலை கொள்ளை சகஜமாகிவிட்டதால், சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என குற்றம்சாட்டினார். ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும், அரிசி, கோதுமை எல்லாம் மத்திய அரசு கொடுப்பது, அதில் எதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி புகைப்படம் எல்லாம் என கேள்வி எழுப்பினார் அவர். கடவுள் நம்பிக்கை இல்லாத திமுகவினர் உடனடியாக இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஆவசேமாக பேசினார்.
மேலும் படிக்க | கிசுகிசு : செம கடுப்பில் குடில் கட்சி தலைவர், கலகலக்கும் கூடாரம்..!
எச் ராஜா காட்டமான பேச்சு
தொடர்ந்து பேசிய எச்.ராஜா, "ஊழல் நிறைந்த சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத அரசு இந்த தமிழ்நாடு அரசு. திமுக ஆட்சியில் உள்ள ஒவ்வொரு நாளும் தமிழகம் சீரழிவை நோக்கி செல்லும். திமுக என்பது புழுகுணி கும்பல் என்பது தெரியவந்துள்ளது. ஜிஎஸ்டி 29 பைசா கொடுப்பதாக கூறிய பொய்யை வெளிக்கொண்டு வந்தோம். ரேஷனில் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மத்திய அரசு வழங்குகிறது. இதில் எதற்கு கருணாநிதி, ஸ்டாலின் படம்?. ஈவேரா ஆட்கள் தானே நீங்கள், கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடியன் ஸ்டாக் கோவிலுக்குள் எப்படி போகலாம்?. கோவிலில் திக, திமுகவினர் இருக்கலாம் என்றால் எந்த மதத்திலும் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்து கோவிலை விட்டு செல்லுங்கள்
முதலில் நீ க்விட் என்கிறேன் நான், நீங்கள் இறை நம்பிக்கை இல்லாத இந்து விரோதிகள் கோவிலை விட்டு வெளியே செல்லுங்கள். பல இந்துக்களின் சொத்துக்களை வக்பு வாரியத்திற்கு சொந்தம் என சொல்கிறார்கள். இந்துக்கள் சொத்துக்களை அபகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதி மத்திய அரசு சரியான முறையில் செய்லபடுகிறது. 12 லட்சம் கோடி சொத்து மதிப்பு உள்ள வக்பு வாரியத்தின் வருமானம் 200 கோடி மட்டும் என காட்டுகின்றனர். முஸ்லீம் சமூதாய மக்களை இவர்கள் சுரண்டி சாப்பிடும் அமைப்பாக வைத்திருக்கின்றனர். இதற்கு எதிராக இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது. இதனை எதிர்ப்பவர்கள் முஸ்லீம் ஏழை எளிய மக்களை எதிர்ப்பவர்கள்" என தெரிவித்தார்.
மேலும் படிக்க| தாழ்தள பேருந்தில் இந்த வசதிகளும் இருக்கிறது - மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ