காஷ்மீர் பாராமுல்லாவில் பதுங்கு இடங்கள், பயங்கர ஆயுதங்கள்: பகீர் Report!!

ஜம்மு-காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LoC) பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் செக்டரில், பல மறைவிடங்கள் இருப்பதைக் கண்டறிந்த இந்திய ராணுவம் அங்கிருந்து பெரும் அளவிலான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் மீட்டுள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 1, 2020, 04:13 PM IST
காஷ்மீர் பாராமுல்லாவில் பதுங்கு இடங்கள், பயங்கர ஆயுதங்கள்: பகீர் Report!!
Zee Media

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் (Jammu Kashmir), எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LoC) பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் செக்டரில், பல மறைவிடங்கள் இருப்பதைக் கண்டறிந்த இந்திய ராணுவம் (Indian Army) அங்கிருந்து பெரும் அளவிலான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் (Arms and Ammunition) மீட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தை படையினர் கண்டறிந்த பின்னர் விரிவான தேடல் தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இடத்தில் உள்ள அடர்த்தியான மரங்கள், செடி கொடிகள் மற்றும் வானிலை காரணமாக, இந்த இடத்தில் ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம் என ஏற்கனவே அங்கு ஒரு எச்சரிகை நிலை இருந்தது.

அந்தப் பகுதிகளிலும் பயங்கரவாதிகள் வழக்கமாக ஊடுருவ முயற்சிக்கும் பகுதிகளிலும் கண்காணிப்பும் ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன. ஊடுருவலின் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரவு முழுவதும் கண்காணிப்பு தொடர்ந்தது. அடுத்த நாள் அதிகாலை 5:00 மணியளவில் அப்பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

ALSO READ: லடாக்கில் வலுவான நிலையில் இந்தியா... Pangong Tso தெற்கு பகுதி ஏன் முக்கியமானது..!!!

ஏழு மணிநேர தேடலுக்குப் பிறகு, ஐந்து ஏ.கே. சீரிஸ் ரைஃபிள்ஸ் (ஆறு மேகசிங்கள் மற்றும் 1,254 சுற்று ஏ.கே. வெடிமருந்துகளுடன் இரண்டு சீல் செய்யப்பட்ட பெட்டிகள்), 9 மேகசின்கள், 6 சுற்றுகள் கொண்ட ஆறு கைத்துப்பாக்கிகள், 21 கையெறி குண்டுகள், 2 யுபிஜிஎல் கையெறி குண்டுகள், ஒரு ஆண்டெனா, ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய ஆயுத மற்றும் வெடிமருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

LoC-க்கு அருகிலுள்ள தற்காலிக சேமிப்பு இடங்களில் போர் ஆயுதங்களுக்கான கிடங்குகளை உருவாக்குவதே இப்பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருப்பதன் பின்னணியில் உள்ள வழிமுறையாகும். இப்படி இந்தப் பகுதியில் வைக்கப்படும் ஆயுதங்களை, ஊடுருவி இந்தியாவிற்குள் வரும் பயங்கரவாதிகளும், உள்ளூரில் உள்ள பயங்கரவாதிகளும் தேவைப்படும் போது நாச வேலைகளில் பயன்படுத்த முடியும்.  ஜம்மு-காஷ்மீருக்குள் ஆயுதங்களை அனுப்ப பாகிஸ்தானை (Pakistan) தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள் மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளையும் இது காட்டுகிறது.

காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான இதேபோன்ற முயற்சி 2020 ஜூலை 22 ஆம் தேதியன்றும் நடைபெற்றது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அருகில் ஆயுதங்களை பதுக்க முயலப்படுவதாக அப்போது உள்ளீடுகள் பெறப்பட்டன.

பாராமுல்லாவின் (Baramulla) ராம்பூர் செக்டரில் நடந்த தேடுதல் நடவடிக்கையில், 1 ஏ.கே.எஸ் -74 யூ, 5 கைத்துப்பாக்கிகள் (சீன அடையாளங்களுடன் ஒன்று) மற்றும் மேகசின்கள், 24 கையெறி குண்டுகள் மற்றும் போர்க்குருவிகள் பல மீட்கப்பட்டன.

ALSO READ: மீண்டும் மீண்டும் சீண்டும் சீனா: அஜித் டோவல் தலைமையில் அவசர ஆலோசனை!!