கோர்ட்டில் ஆஜராகாத டெல்லி முதல்வரான மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கல்வித்தகுதி குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய கெஜ்ரிவால், நரேந்திர மோடி 12-ம் வகுப்பு வரை தான் படித்திருந்ததாகவும், அவர் வெளியிட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்கள் போலியானவை என டிவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து கெஜ்ரிவால் மீது பாஜக-வை சேர்ந்த கர்பி அங்லோங் என்பவர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு இனி அரசு வேலை வழங்கப்படமாட்டாது என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
அசாமில் வறுமையை ஒழிக்கவும், குழந்தைகள் இறப்பை தடுக்கவும் புதிய மக்கள்தொகை கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வோருக்கு இனி அரசு வேலை வழங்கப்படாது.
குடியரசு தின விழாவையொட்டி அசாம் மாநிலத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் மற்றும் அசாமில் பலத்த பாதுகாப்பையும் மீறி குடியரசு தின நாளான இன்று தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவங்களில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
உல்பா தீவிரவாதிகளே இத்தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாகவும். தங்களது இருப்பை உணர்த்தும் விதமாகவே குடியரசு தினத்தன்று அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்.
மேகாலாயா மாநிலத்தில் கடந்த மாதம், மூத்த காங்கிரஸ் தலைவரும் அம்மாநில உள்துறை மந்திரியுமான லிங்டோ என்பவரின் மகனுக்கு சொந்தமான சொகுசு இல்லத்தில் 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ரத்னேஸ்வர் மோரனின் மகன், குல்தீப் மோரன் என்பவரை கடந்த 1-ம் தேதி, அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் பகுதியில் உல்ஃபா அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இந்நிலையில், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் தர வேண்டும் எனவும், பணம் தராவிட்டால், குல்தீப்பை சுட்டுக் கொன்று விடுவோம் எனவும் உல்ஃபா அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கோகரஜஹார் மாவட்டத்தில் மக்கள் நெரிசல் அதிகம் மிகுந்த மார்க்கெட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகள் ராணுவ உடையில் வந்ததாக கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. மேலும் 4 அல்லது 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்யும் பலத்த மழையால் மாநிலம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அங்குள்ள 22 மாவட்டங்கள் வெள்ள நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவரை அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
அசாமில் பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 100 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 88,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 6 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளை நிலங்கள்
நீரில் மூழ்கி உள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லகிம்பூர் மாவட்டத்தில் மட்டும் 7 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக சர்பானந்த சோனோவால் இன்று மாலை பதவியேற்றார்.
அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு 60 இடங்களும், அதன் கூட்டணி கட்சிகளான அசாம் கணபரிஷத் கட்சிக்கு 14 இடங்களும், போடோ மக்கள் முன்னணிக்கு 12 இடங்களும் கிடைத்தன.
அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநர் பி.பி.ஆச்சாரியா அவர்கள் சோனோவாலுக்கும் அவருடன் பதவியேற்ற மற்ற அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
சட்டமன்ற தேர்தல் அசாம் உட்பட புதுச்சேரி, கேரளா, தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது.
தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும்..
மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும், அசாமில் 2 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.
126 தொகுதிகள் கொண்ட அசாமில் 1,064 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 81 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவானது.
அங்கு வாக்கு எண்ணிக்கை மும்முரமாக எண்ணப்பட்டு வருகின்றன.
சற்று முன் கிடைத்த தகவலின் படி பாரதீய ஜனதா முன்னிலை வகிக்கிறது..
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி முன்னிலை வகிக்கிறது. புதுவையிலும் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. கேரளாவில் இடது சாரிகள் முன்னிலை வகிக்கிறது. அசாமில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது......
2016 சட்டமன்றத் தேர்தல் தமிழகம் மட்டும் மின்றி கேரளம், புதுவை, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்துள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தல் தமிழகம் மட்டுமின்றி கேரளம், புதுசேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் ஐந்து இந்திய மாநிலங்களின் அடுத்த முதல்வர்கள் யார் என்பது இன்னும் சற்று நேரத்தி தெரிந்துவிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.