முகக்கவசங்களை நாம் அனைவரும் அணிந்தாலும், அவற்றை எப்படி சரியான முறையில் அணிய வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாக, நாம் பல தவறுகளை செய்து விடுகிறோம். இதனால், பலர் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.
ஸ்புட்னிக் வி (Sputnik V) என்பது மூன்று வார இடைவெளியில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய இரண்டு டோஸ் தடுப்பூசி ஆகும். இதன் தனிப்பட்ட அம்சம் என்னவென்றால், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளில் உள்ள ஆன்டிஜென்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.
ஸ்புட்னிக் வி என்பது மூன்று வார இடைவெளியில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய இரண்டு டோஸ் தடுப்பூசி ஆகும். இதன் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளில் உள்ள ஆன்டிஜென்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. மற்ற தடுப்பூசிகளில், இரண்டு டோஸ்களிலும் ஆண்டிஜன்கள் ஒரே அளவில் உள்ளன.
கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவின் கொரோனா வைரஸ் (Corona VIrus) தடுப்பூசியான ஸ்பூட்னிக் -V (Sputnik-V ) தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமதி வழங்கியது.
தற்போது லண்டனில் உள்ள சீரம் நிறுவன தலைவர், இந்தியாவில் பலரிடம் இருந்து மிரட்டல்கள் வருகிறது என்பதால், சில காலம் லண்டனிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன் என சில நாட்களுக்கு முன் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. திங்களன்று (மே 3, 2021) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது.
சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மே 1 முதல் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பிக்க வாய்ப்பில்லை என்று முன்னர் கூறியிருந்தன. ஆனால் கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பிக்கின்றன. இந்த மாநிலங்களுக்கு கூடுதல் தடுப்பூசி அளவுகள் தேவைப்படும்.
கொரோனா பரவலை தடுக்க, தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என உள்ள நிலையில், ஏற்கனவே இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்தியாவில் தற்போது கோவாக்சின் (Covaxin), கோவிஷீல்டு (Covoshield) ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை தயாரிக்கும் நிறுவனங்கள், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான விலைகளை அதிகரித்துள்ளன.
காசியாபாத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், காசியாபாத்தின் இந்திராபுரத்தில் உள்ள ஒரு குருத்வாரா கோவிட் -19 நோயாளிகளுக்கு உதவ ஒரு தனித்துவமான முயற்சியை முன்வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து வருவதால் மக்களிடையே பீதி பரவி வருகிறது. பல விதமான மருத்துவ வசதிகளுக்கும், பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.