சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
தெற்கு டெல்லியின் சன்லைட் காலனியில் மர்மான முறையில் தொடர்சியாக நாய்கள் கொல்லப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தேடும் பணியில் டெல்லி காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது!
அன்ஷூ பிரகாஷ் வழக்கில் டெல்லி காவல்துறை ஆர்வம் காட்டி வருவது போல, மற்ற வழக்குகளிலும் ஆர்வத்தை காட்டினால் நன்றாக இருக்குப் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!
டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்டதை அடுத்து, டெல்லி போலீஸ்க்கு நன்றி சொன்ன கெஜ்ரிவால்,
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, டெல்லி தலைமை செயலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு போய் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கார் ப்ளூ வேகன் ஆர் மாடல் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக்குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இதுதான் டெல்லி போலீஸ். அவர்களின் அலச்சியத்திற்க்கு மிக்க நன்றி. உங்களுடைய கவனம் எங்கு இருக்கிறது? என்று கூறியுள்ளார்.
சமீப காலமாக இந்தியாவில் சாமியார்களின் வரவு அதிகமாகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு வட இந்தியாவில் பாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் கைதானை அடுத்து மற்ற சாமியர்களின் மீது மக்களின் கவனம் சென்றுள்ளது.
பாகிஸ்தானில் பிறந்த கனடா நாட்டு வம்சாவளி எழுத்தாளர் மீது அதிருப்தியடைந்ததால் டரேக் பத்தாவை கொல்வதற்கு சோட்டா ஷகீலின் கூட்டாளி ஜுனைத் சவுத்ரி என்பவர் திட்டமிட்டு வருவதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டெல்லியில் உள்ள வசிராபாத் சாலையில் சோட்டா ஷகீலின் டெல்லி சிறப்புப் படை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சோட்டா ஷகீலுக்காக ஹவாலா பணத்தை கைமாற்றும்போது டெல்லி போலீசார் இவரை முன்னர் கைது செய்தனர். நான்கு மாதங்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலையான ஜுனைத் சவுத்ரி சோட்டா ஷகீலை சந்தித்ததால் மீண்டும் கைதானார்.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கு டெல்லி கோர்ட் இன்று ஜாமின் வழங்கியது.
அதிமுகவில் இரு அணிகள் பிளவு காரணமாக ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, மேலும் சுகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டிடிவி தினகரன், மல்லிகார்ஜூன் ஜாமீன் மனு மீதான விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டில் ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைதான இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று டெல்லி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுப்பதற்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன.
ஆர்கேநகர் தேர்தல் தேதியை நிர்ணயிக்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லி தில் ஹசாரி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் மேலும் ஒரு குற்றம் சாட்டியுள்ளனர். 5 ராசியான எண் என்பதால், ரத்தான தேர்தலை 5-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என்று சுகேஷிடம் தினகரன் கேட்டுக்கொண்டதாக புகார் அளித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் மேலும் 5 பேரை கைது செய்ய வேண்டியுள்ளது என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரது நீதிமன்ற காவல் மே 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் 8-ம் தேதி அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டுமென எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு டிடிவி தினகரனின் வங்கிக் கணக்கில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவிலான தொகை டெபாசிட் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.