டெல்லி பாஜகவின் ஐடி செல் தலைவர் அபிஷேக் துபே, தேசிய தலைநகரில் விவசாயிகளின் போராட்டத்தை ஊக்குவிக்க கெஜ்ரிவால் முயற்சிப்பதாகவும், கலவரத்தைத் தூண்ட சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
மத்தியபிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரென்சிங் மூலமாக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் (punjab), ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 19வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் உட்பட பலரை போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நாட்களாக போராட்டங்கள் தொடர்கின்றன.
விவசாய சட்டங்களில் செய்யப்பட தேவையான திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,ஆனால் விவசாயிகள் தலைவர்களிடமிருந்து எந்த ஆலோசனையும் இன்னும் வரவில்லை என்றார்.
ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi). புதிய நாடாளுமன்ற கட்டிடம் (New Parliament Building) தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நிர்மாணிப்பதற்கான சாட்சியாக மாறும் என்றார்.
மத்திய அரசின் வரைவு திட்டத்தை நிராகரித்த விவசாய சங்கங்கள். மேலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். டெல்லிக்குச் செல்லும் சாலைகளை ஒன்றன்பின் ஒன்றாகத் தடுப்போம் என்று எச்சரிக்கை.
தில்லியில் ஒரு மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டு வருவதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சில நாட்களாகவே தில்லியில் கடும் உஷார் நிலை இருந்து வருகிறது.
புது டெல்லி பயன்படுத்தப்பட்ட கார்கள்: உங்கள் பட்ஜெட் 3 முதல் 4 லட்சம் வரை இருந்தால், இந்த விலை வரம்பில் ஹோண்டா சிட்டி (Honda City) காரை தவிர ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 (Hyundai Grand i10) மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசைர் (Maruti Swift Dzire) போன்ற வாகனங்களை நீங்கள் வாங்கலாம்.
அரசாங்கத்திற்கும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடைபெறும்.
இந்த வழக்கில் முதலில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் விவசாயிகளை இணைத்தே பிறகே வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.