3 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் நிதின்கத்காரி, வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.
அப்பொழுது தமிழக முதல்வரிடம் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி முதலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அப்போது தமிழக நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடியை முதல் முறையகா சந்தித்து பேசினார். ஹைட்ரோகார்பன் திட்டம், வறட்சி நிவாரணம், மேகதாது அணை, பவானியில் தடுப்பணை, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியை டெல்லையில் சந்தித்து பேசியது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில் கப்பலில் இருந்த கசடு எண்ணெய் கடலில் கசிந்தது. கடற்கரைகளில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலையை திறந்து வைக்க மோடி வருகிறார்.
கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. சிலையை திறந்து வைக்க தனி விமானத்தில் கோவைக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். மாலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் டெல்லிக்கு உடனடியாக புறப்படுகிறார். விமானநிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.
சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்பொழுது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.கள் வெளியேற்றப்பட்டது, தாக்குதலில் ஈடுபட்டதை கண்டிக்கிறோம். திமுகவின் சுயநலத்திற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவில்லை.
சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்பொழுது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.கள் வெளியேற்றப்பட்டது, தாக்குதலில் ஈடுபட்டதை கண்டிக்கிறோம். திமுகவின் சுயநலத்திற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவில்லை.
திமுக எம்.பி.,க்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, நடந்த பிரச்னை தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் அளித்தனர்.
பிறகு திருச்சி சிவா கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இன்று ஆளுநரை சந்திக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலையற்ற அரசியல் சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று அதற்கான தீர்வு உருவானது. சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு, ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். இதையடுத்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கூறப்பட்ட நிலையில், நேற்று சட்டமன்றம் கூடியது.
சசிகலாவும் இளவரசியும் சிறையில் அடைக்கப்பட்டன. ஆனால் சுதாகரன் சரணடையவில்லை.
இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் சாலை வழியாக சசிகலா மற்றும் அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் பெங்களூர் சிறை சாலை சென்றடைந்தார். நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து ஆவணங்களை பார்வையிட்டு வருகிறார். சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார். சசிகலா கணவர் நடராஜன் மாலை 5 மணியளவில் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார். அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர். ஆனால் சுதாகரன் சரணடையவில்லை. சரணடைந்த சசிகலாவும் இளவரசியும் சிறையில் அடைக்கப்பட்டன
இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று சரணடைய உள்ளார். சாலை வழியாக பெங்களூரு செற்ற சசிகலா பெங்களூரை சிறை சாலை சென்றடைந்தார்.
ரிசார்ட்டிலிருந்து மாறுவேடத்தில் தப்பி வந்த அதிமுக எம்எல்ஏ சரவணன்எங்களை கடத்தி வைத்ததாக புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ரிசார்ட்டில் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமியை போலீஸ் கைது செய்யலாம் என்பதால் கூவத்தூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது கூவத்தூர் போலீசார் ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.