காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இன்று அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் ஹசீம் மன்சூர். நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த சிறுவனை வீழ்த்தி ஹசீம் மன்சூர் தங்கப்பதக்கம் வென்றான்.
இந்திய ராணுவம் இன்று நக்ரோடா பகுதியில் சீவுதல் நடவடிக்கைகளை மீண்டும் துவங்கியது. காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் நேற்று மரணம் அடைந்தனர்.
காஷ்மீர் எல்லையில் 3 இந்திய வீரர்கள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்துள்ளது. காஷ்மீரின் மேக்சல் செக்டார், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திப்பூரா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர் ஒருவர் பலியானார் மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மோதலில் போலீஸார் இருவர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:- தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதியில் தீவிரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாக உளவுப் பிரிவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனே அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர். அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த சண்டையில் சத்ரிபோரா சோபியான் பகுதியைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தவே பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் பாதுகாப்பு படை ஒருவர் காயம் அடைந்தார்.
கடந்த சில நாட்களாக காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் உள்ள இந்திய கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 8 பேர் உயிர் இழந்தனர். இதனையடுத்து இதற்க்கு பதிலடி கொடுக்க இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
சர்வதேச எல்லை பகுதியான மெந்தர், சம்பா ஆகிய இடங்களில் அமைத்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 8 பேர் பலியானார்கள்.
இதனையடுத்து இதற்க்கு பதிலடி கொடுக்க இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் 14 சேதமடைந்தன. இதில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் பலியானர்கள். 2 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ வீரரை கொடூரமாக கொன்றுள்ளனர். இதற்க்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.
நேற்று இரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர் வீரர் ஒருவரை சிறைபிடித்த தீவிரவாதிகள் அவரை கொடூரமாக கொன்று உடலை துண்டுதுண்டாக வெட்டி வீசி சென்றுள்ளனர். தீவிரவாதிகளின் துப்பாக்கி தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் மீண்டும் இன்று அதிகாலை ஆர்.ஸ்.புரா பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் படைகள் இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் காயம் அடைந்ததாக இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை எதிர்த்து இந்திய பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் காவலர்கள் நடத்திய சோதனையில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றினர். தோட்டாக்கள், கை துப்பாக்கி, 26 கிலோ வெடிபொருள் சாதனங்கள் காஷ்மீரை சேர்த்த ரஜூரி மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.