திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப் பேரனை கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். இருப்பினும் அரசியல் தலைவர்களை சந்திப்பது, திமுக நிகழ்ச்சிகள் தொடர்பாக நிர்வாகிகள் சந்திப்பது என அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
தற்போது தனது கொள்ளுப் பேரனுடன் கருணாநிதி கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வதந்திகள் உண்மை இல்லை என திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு கூறியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார்.
கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை இவரை சந்திக்கிறார்.
2014-ம் ஆண்டு அருள்நிதி திருமணத்தின் போது கருணாநிதியை வைகோ நேரில் சந்தித்தார். அதற்குப் பிறகு, சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து இருவரும் நேரில் சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டையில் செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த சிகிச்சை முடிவடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டும் என்று கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பணியை கவுரவிக்கும் வகையில் சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
விழா மேடை தமிழக சட்டப்பேரவை வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்கு, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சென்னை கோபலபுரத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியும் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனிடையே, திமுக தலைவருக்காக தான் எழுதிய பிறந்தநாள் கவிதையை தனது பேஸ்புக் பக்கத்தில் கனிமொழி வெளியிட்டு இருந்தார்.
pic.twitter.com/jCNbfXVtkX
திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது இலத்தில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார்.
கருணாநிதி பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தார். இளம் வயது முதல் பொது வாழ்வில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இன்று அவர் சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாகவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வைரவிழா:-
திமுக தலைவர் கலைஞரை வாழ்த்திட வைரவிழாவில் கலந்துகொள்ள அனைவருக்கும் வைரவிழா மடல் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தி.மு.கழகம் எனும் ஆலமரம் பேரறிஞர் அண்ணாவின் காலத்திற்குப் பிறகும் தழைத்து, செழித்து வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணமான நம் தலைவரின் உறுதிமிக்க நிலைப்பாடு, வைரத்தின் உறுதிக்கு எந்தளவிலும் குறைந்தவை அல்ல.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரசியலையும் தாண்டி பல்வேறு துறைகளில் ஆர்வமுடையவர் கருணாநிதி. மூத்த அரசியல்வாதியாக மட்டுமில்லாமல், அற்புதமான கதாசிரியராக திகழ்பவர். சினிமாவில் கருணாநிதியின் வசனங்களை பேசிவிட்டால் ஒரு நடிகர் முழு தகுதி பெற்றவராகிறார். அவரின் வசனம் என்பது திரைத்துறையில் நுழைய அனுமதி சீட்டு போன்றது.
கருணாநிதியை நான் தமிழ் ஆசான் என்று கூறியதற்கு எம்ஜிஆரும் போனில் அழைத்து பாராட்டினார். அதே போல தசாவதாரம் படத்தின் போது எனது கன்னத்தை கிள்ளி பாராட்டு வழங்கியவர் கலைஞர் கருணாநிதி.
சட்டப்பேரவை வைர விழாவில் மதவாத கட்சிகளை அழைக்க மாட்டோம் என்று திமுக சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது, திமுகவிடம் அரசியல் நாகரிகம் கிடையாது. கருணாநிதியை வைத்து குறுகிய அரசியலை நடத்துகிறது திமுக. கருணாநிதியின் வைரவிழாவிற்கு அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும். பாஜக மதவாத கட்சி என்று திமுகவினர் பரப்பி வருகிறார்கள். பாஜக மதவாத கட்சி என்றால் வாஜ்பாய் தலைமையிலான அரசில் ஏன் திமுக கூட்டணி வைத்தது? அப்போது பாஜக மதவாத கட்சி என்பது தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நவம்பர் மாதம் ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிசம்பர் மாதம் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பூரண குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பிய அவரை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நவம்பர் மாதம் ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிசம்பர் மாதம் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பூரண குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பிய அவரை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து வீட்டிலேயே சிகிச்சை பெறறு கருணாநிதி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாது.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளுடன் வைர விழாவை பிரமாண்டமாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது.
இதில் 7 மாநில முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி 1957-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டசபையில் அவர் அடி வைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது.
கடந்த 1-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சில
தினங்களுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பிய கருணாநிதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தலைவர் கருணாநிதி சளித் தொல்லை மற்றும் ஒவ்வாமை காரணமாக நேற்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் சீராக முன்னேற்றம் பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.