ஈராக் நாட்டில் பாக்தத்தில் உள்ள யார்மோக் மகப்பேறு மருத்துவமனையில் மின் கோளாறினால் ஏற்பட்ட தீவிபத்தில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் பலியானார்கள். இந்த மருத்துவமனையில் இருந்து 7 குழந்தைகளையும் 29 பெண்களையும் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்கபட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றபட்டு உள்ளனர்.
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்துக்கு தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் மிரட்டல் இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில், மட்டும் ஐ.எஸ் அமைப்பினரால் 300-க்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லபட்டு உள்ளன.
பலுசிஸ்தான் தலைநகர் குயிட்டாவில் பார் கவுன்சில் தலைவர், வழக்கறிஞர் பிலால் அன்வர் காசி இன்று காலை மர்மநபர்களால் தாக்கப்பட்டார். மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அன்வர் காசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் மற்றும் போலீசார் சென்றபோது பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததில் வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், போலீசார் என அங்கியிருந்தவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
காபூலின் புறநகர் பகுதியில் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த தாக்குதல் பற்றி முழுமையான தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், தலீபான் பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் உள்துறை மந்திரி சேதிக் சிதிக்கி தனது டுவிட்டர் பக்கத்தில்:- இந்த தாக்குதல் பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.